ஆஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காமல் பரவிவரும் காட்டுத் தீ

ஆஸ்திரேலியாவின் தென் பகுதியில் லூசிண்டேல் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் காட்டுத் தீயானது மிக வேகமாக பரவி வருகிறது.
கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீயால் இதுவரை அந்த பகுதியில் 16 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு சேதம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இரவு பகல் பாராமல் தீயணைப்பு படையினரும் இந்த காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி வாசிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here