கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட ராணி மற்றும் இளவரசர் பிலிப்!

பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத்தும் அவரது கணவர் இளவரசர் பிலிப்பும் இன்று கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டதாக அரண்மனை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. வின்ட்சர் கோட்டையில் வைத்து 94 வயதான ராணியார் இரண்டாம் எலிசபெத்தும் அவரது கணவர் 99 வயதான இளவரசர் பிலிப்பும் இன்று கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.

இருவருக்கும் அரண்மனை மருத்துவரே தடுப்பூசியை அளித்ததாக தெரிய வந்துள்ளது.

பிரித்தானிய ராணியாரும் அவரது கணவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்வது என்பது அவர்களது தனிப்பட்ட விருப்பம் என முன்னர் கூறப்பட்டது,

ஆனால் தடுப்பூசி எடுத்துக் கொண்ட விடயத்தை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பது ராணியாரின் விருப்பம் என்றும், அது எஞ்சிய பிரித்தானியர்களை கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள ஊக்குவிக்கும் என அவர் நம்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பக்கிங்ஹாம் அரண்மனை இன்று ராணியார், இளவரசர் பிலிப் இருவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டதை உறுதிப்படுத்தியது.

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிப்பதில் முன்னுரிமை வழங்கப்படுவதால், இன்று ராணியாரும் அவர் கணவர் இளவரசர் பிலிப்பும் தடுப்பூசி எடுத்துக் கொண்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும் ராணியாருக்கும் அவர் கணவர் இளவரசர் பிலிப்புக்கும் எந்த நிறுவனத்தின் தடுப்பூசி போடப்பட்டது என்ற தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 33 ஆண்டுகளில் முதன் முறையாக ராணியாரும் அவர் கணவர் இளவரசர் பிலிப்பும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வின்ட்சர் கோட்டையில் வைத்து கொண்டாடியுள்ளனர்.

இருவரும் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

மட்டுமின்றி, தற்போதைய சூழ்நிலை கருதி, ராணியார் பல்வெறு சந்திப்புகள் ,  நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளதாகக்ஜ்  கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here