வாஷிங்டன்:
இந்தநிலையில் அவரது பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் முடிய இருக்கும் நிலையில் கியூபாவுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அந்த வகையில் கியூபாவை பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடாக கடந்த வாரம் அமெரிக்கா அறிவித்தது. இதற்கு கியூபா கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகக் கூறி கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்டீவன் முனுச்சின் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
இது பற்றி அவர் கூறுகையில் ‘‘கியூபாவிலும், உலகெங்கிலும் உள்ள மோசமான மனித உரிமை நிலைமைகளை நிவர்த்தி செய்ய அமெரிக்கா தொடர்ந்து அனைத்து கருவிகளையும் பயன்படுத்தும். அதன்படி உலக மனித உரிமைகள் மீறல் பொறுப்புக்கூறல் சட்டத்தின்கீழ் கியூபாவின் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன’’ என்றார்.