தல அஜித்குமார், தனது நண்பர்களுடன் வாரணாசிக்கு சமீபத்தில் சென்றுள்ளார். அப்போது தொப்பி, மாஸ்க் அணிந்திருந்ததால், யாராலும் அவரை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. வாரணாசியில் அவர் தெருக்கடைகளில் நண்பர்களுடன் சாப்பிட்டுள்ளார். தல அஜித் இப்போது ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதனை ஹெச்.வினோத் இயக்க இந்தப் படத்தை போனிகபூர் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் அஜித் ஜோடியாக இந்தி நடிகை ஹூமா குரேஸி நடிக்கிறார். இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக மிரட்டவிருக்கிறார் . ஏற்கனவே 100 படத்தில் அதர்வாவுக்கு வில்லனாக நடித்த ராஜ் ஐயப்பாவும் இதில் வில்லனாக வருகிறார்.