கோடிக்கணக்கில் மக்கள் பயந்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள் கொரோனா எனும் கொடிய நோய் மிக மகிழ்ச்சியாகத் துரத்திக்கொண்டிருக்கிறது. ஏவி விட்டவர்கள் எத்தரப்பினர் என்று தெரிந்தும் ஏதும் செய்யமுடியாமல் உலகச் சுகாதாரம் சோர்ந்து கிடக்கிறது.
ஏன் இந்த நிலை? திருடன் என்று தெரிந்தும் நடவடிக்கை எடுக்க முடியாமல் இருக்கிறது களவாணிகள் என்று தெரிந்தும் கைது செய்யப்பட முடியாத கலக்கத்தில் இருப்பதுபோல் இன்றைய உலக சுகாதார அமைப்பின் பரிதாப நிலை.
சீனாவில்- வூஹானில் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படும் கொரோனா பல லட்சம் மக்களைப் பலி கொண்டிருக்கிறது. பலியின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. தடுத்து நிறுத்தும் அசகாய முயற்சிகள் முழுமையான முயற்சியை எட்டவே இல்லை. அப்படியிருக்க, ஏவி விட்டவர்களின் நாட்டில் மட்டும் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது என்றால் , இதை என்ன வென்று சொல்வது. இதன் பின்னணிதான் என்ன?
உலகை ஆளவேண்டும் என்ற வெறித்தனத்தில் பேச்சை மறந்து, பேச்சை அவமதித்து, ஆயுதப்போரை நம்பாமல் வைரஸ் எனும் நுண்மி பரவலை ஏற்படுத்திவிட்டு போர்வைக்குள் பதுங்கிக்கிடக்கும் தன்மை எந்த வகையிலானது?
மக்கள் செத்தொழிந்துகொண்டிருக்கிறார்கள் , மாற்று வழிகள் அறியாமல் தொற்றுக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அதன் தன்மை இன்னும் முழுமையாக உணரப்படவில்லை.
மருந்துகளின் உண்மையான வீரியம் அறிய இன்னும் நாட்கள் பிடிக்கும். அதுவரையில் ஏவிவிட்டவர்களின் கணக்கு அவர்களுக்குச் சாதகமாகவே அமைந்துவிடும்.
இதையும் தாண்டி புதிய தொற்று பரிணாமம் கண்டு வருகிறது. அத்ற்கும் மருந்துகல் அவசியமாகிவிடும்.
ஏவி விட்ட நாட்டில்- அவர்கள் அனைத்திலும் தயார் நிலையில் இருக்கிறார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதில் உலக நாடுகள் ஏமாந்துவிட்டதை இப்போதுதான் நிபுணர்கல் கூறமுனைந்திருக்கிறார்கள். காலம் கடந்து ஞானோதயம் பிறந்திருக்கிறது. பல நாடுகள் விழிப்புடன் இல்லையாமே!
அப்படியானால் , உலக சுகாதார அமைப்பின் பணிதான் என்ன?
சினாவுக்குச்சென்ற சுகாதார நிபுணர் குழு காரணங்களைக் கண்டறியலாம். வெளவ்வால்கள் என்றும், வன மிருகங்கள் என்றும், பாம்புகள் எனறும், பறவைகள் தாம் காரணம் என்று கதைகளைக் கொண்டுவரலாம். இதனால் ஆவப்போவதென்ன ?
ஏவலாளிகளுக்கு கிடைக்கும் தண்டனைதான் என்ன? அவர்களின் தொடர் குணம் திருத்த முடியாததாகிவிட்டது. புத்தாண்டு பிறப்பதுபோல் புதுப்புது தொற்றுகள் அவர்களின் ஆய்வுக்கூடங்களில் தயாராகிக்கொண்டே இருக்கின்றன. அந்த ஆய்வுகளை வெளியிட்ட அதே நாட்டின் பெண்ணுக்கு அட( டை) க்கப்பட்டிருக்கிறார்.
அந்த ஆய்வுக்கூடம் வெளிப்பார்வைக்கு வேறு மாதிரி இருக்கும்! உள்ளே. யாருக்கும் அறியாமல் தொற்றுகள் தோரணங்களாகிக்கொண்டிருக்கும்.
அதை முற்றாகத் துடைத்தொழிக்காதவரை ஏவல் நாடகத்தின் கதையும் காட்சிகளும் மாறவே மாறாது. மனித அழிவுகல் அவர்களுக்கு உயிர் விளையாட்டாகவே இருக்கும்.
சிற்பியன்