200 கிலோ முதலை பொறியில் சிக்கியது

கோலாலம்பூர்:

சுமார் 200 கிலோ எடைக் கொண்ட முதலை ஒன்று மலாக்கா, மாலிம் ஜெயாவில் பொறி வைத்து பிடிக்கப்பட்டது.

3.35 மீட்டர் நீளம் கொண்ட அந்த முதலை மாலிம் ஆற்றில் பொறி வைத்து பிடிக்கப்பட்டது. தேசிய வனவிலங்குத் துறை அதிகாரிகள் அந்த முதலையைப் பிடிக்க ஆற்றில் பொறி வைத்தனர். ஆற்றுக்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வளர்க்கப்படும் ஆடு உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளுக்கு ஆபத்து நேரிடுவதாய் பொது மக்களிடமிருந்து புகார் பெறப்பட்டதைத் தொடர்ந்து அந்த முதலையைப் பிடிக்க பொறி வைக்கப்பட்டது.

சுங்கை ஆயர் சாலாக், கம்போங் தெங்கா , கிளாபாங் உள்ளிட்ட பல கிராமங்களில் கடந்த ஒரு மாத காலமாக அந்தப் பொறி மாற்றி மாற்றி வைக்கப்பட்டது. ஆயினும் அதில் முதலை மாட்டவில்லை. ஆனால் நேற்று அதிகாலையில் அது அந்தப் பொறியில் சிக்கிக் கொண்டதாக மலாக்கா மாநில வனவிலங்கு பூங்கா துறை துணை இயக்குநர் அல்ஃபியெஷாரில் அனெவார் அமாட் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here