வாஷிங்டன்:
அமெரிக்காவின் 46 ஆவது புதிய அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக இந்திய வம்சாவளி தலைவரான கமலா ஹாரிசும் பதவியேற்றுள்ளனர்.
அமெரிக்காவின் முக்கிய பொறுப்பில் இந்திய வம்சாவளி பெண் அங்கம் வகித்ததால், இந்தியாவுடனான உறவு மேலும் வலுவடையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தி உள்ளது.
மேலும், துணை அதிபராக முதல் முறையாக இந்திய அமெரிக்கர் பொறுப்பேற்றிருப்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் வரலாற்று தருணம். இதன்மூலம் இந்தியா-அமெரிக்கா நட்புறவின் முக்கியத்துவம் மேலும் வலுப்பெற்றுள்ளது என்று ஜென் சாகி கூறி உள்ளார்.
அதிபர் பைடன் தனது அமைச்சரவையின் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பதவிகளில் இந்திய வம்சாவளியினரை நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது.