இந்தியாவின் 72-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு ட்விட்டரில் சிறப்பு எமோஜி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய எமோஜி இந்தியாவின் விமானப் படை , தேசிய கொடியின் நிறங்களை பிரதிபலிக்கும் வகையில் அசத்தலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
ட்விட்டரில் குடியரசு தின சிறப்பு எமோஜி ஜனவரி 30 ஆம் தேதி வரை கிடைக்கும். இது ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், இந்தி, உருது, பஞ்சாபி, மராத்தி, பெங்காலி குஜராத்தி போன்ற மொழிகளிலும் கிடைக்கும். இந்திய குடியரசு தின சிறப்பு எமோஜி ஆறாவது முறையாக வழங்கப்படுகிறது.
`இந்தியாவில் கொரோனாவைரஸ் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் காலக்கட்டத்தில் அணிவகுப்பை விர்ச்சுவல் தளத்திற்கு கொண்டுவர திட்டமிட்டோம். இந்த ஆண்டின் எமோஜி கடந்த கால பெருமைகளை சிறப்பிப்பதோடு இது மக்களை கொண்டாட்டத்திற்கு ஒன்று சேர்க்கும் சிறந்த வழியாக இருக்கிறது.’ என ட்விட்டர் இந்தியா தெரிவித்து உள்ளது.