இனி விண்வெளி பயணத்துக்கும் Uber புக் செய்யலாம் — அசத்தும் Elon Musk

நமது பயண முறை மாறிக்கொண்டே வருகிறது. பேருந்துகள், ரயில்களுக்காக காத்திருந்த காலம் மாறி தற்போது ஓலா, ஊபர் காலம் வந்துவுட்டது. ஆனால், விண்வெளி பயணத்திற்கும் ஒரு ஊபர் ராக்கெட் இருந்தால் எப்படி இருக்கும்?

அதற்கான முயற்சியைத் தான் பிரபல தொழிலதிபர் எலன் மஸ்கின் நிறுவனமான SpaceX எடுத்து வருகிறது. வரும் நாட்களில் இந்த நிறுவனம் வெண்வெளி சுற்றுலா பயணங்களில் நம்மை அழைத்துச் செல்லக்கூடும்.

உலகத்தின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான தொழிலதிபர் எலன் மஸ்க்கின் (Elon Musk) SpaceX விண்வெளி நிறுவனத்தின் ஒரு ராக்கெட் ஞாயிற்றுக்கிழமை 143 விண்கலங்களை விண்வெளியில் செலுத்தியது. இது ஒரே மிஷனில் விண்வெளியில் அதிக விண்கலங்களை செலுத்துவதற்கான ஒரு புதிய சாதனையாகும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளி படை நிலையத்தில் உள்ள விண்வெளி வெளியீட்டு வளாகம் 40 இலிருந்து காலை 10 மணிக்கு பால்கன் 9 (Falcon 9) ராக்கெட் செலுத்தப்பட்டது. இது விண்வெளிக்கு செல்லும் வழியில் புளோரிடாவின் கிழக்கு கடற்கரையில் தெற்கே பறந்தது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

மறுபயன்பாட்டுக்குரிய இந்த ராக்கெட் 133 வணிக மற்றும் அரசு விண்கலங்களையும் 10 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களையும் விண்வெளிக்கு கொண்டு சென்றது. இது நிறுவனத்தின் ஸ்மால்சாட் ரைட்ஷேர் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது சிறிய செயற்கைக்கோள் ஆபரேட்டர்களுக்கு, விண்வெளியின் சுற்றுவட்டப்பாதைகளுக்கு, நம்பகமான, மலிவான அணுகலை வழங்குகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாதகமற்ற வானிலை காரணமாக SpaceX இந்த செலுத்தலை தாமதப்படுத்தியது. ஜனவரி 22 அன்று, டெஸ்லா (Tesla) இன்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எலன் மஸ்க் ட்விட்டரில், “பரந்த அளவிலான வாடிக்கையாளர்களுக்காக பல சிறிய செயற்கைக்கோள்களை நாளை செலுத்தவுள்ளோம். சிறிய நிறுவனங்களுக்கு விண்வெளி சுற்றுப்பாதைக்கான மலிவான அணுகலை வழங்குவதில் மகிழ்ச்சி!” என்று தெரிவித்தார்.

முன்னதாக, உலகளவில் பிராட்பேண்ட் இணையத்தை வழங்கத் தேவையான 800 க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை விண்வெளி சுற்றுவட்டப்பாதைகளுக்கு SpaceX செலுத்துயது. இந்த துறையில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்தால் ஆண்டுதோறும் 30 பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டக்கூடும் என்று நிறுவனம் மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் எலன் மஸ்கின் ‘Starship’என்று பெயரிடப்பட்டுள்ள கோள்களுக்கிடையிலான ராக்கெட் திட்டத்திற்கு தேவையான நிதியைப் பெற எலன் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.

பிப்ரவரி 2017 இல் 104 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி இந்தியா (India) சாதனை படைத்தது. தற்போது, SpaceX நிறுவனம், 143 செயற்கைக்கோள்களை அடுத்தடுத்து விண்ணில் செலுத்தி புதிய உலக சாதனையை உருவாக்கியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை ஏவப்பட்ட 143 செயற்கைக்கோள்களில் வணிக மற்றும் அரசாங்கத்தின் கியூப்சாட்கள், மைக்ரோசாட்கள், சுற்றுப்பாதை பரிமாற்ற வாகனங்கள் மற்றும் 10 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் (Satellite) ஆகியவை அடங்கும். ஒரே விண்வெளி பயணத்தில் பயன்படுத்தப்பட அதிக அளவிலான அதிகபட்ச விண்கலங்களாகும் இவை. ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களின் இந்த தொகுதி விண்மீன் தொகுப்பில் துருவ சுற்றுப்பாதையில் வைக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் கூட்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here