அபுதாபி:
குறிப்பாக இருநாடுகளில் இருந்து வரும் கொரோனா பரவல் தொற்று மற்றும் அதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவாகப் பேசினர். அமீரகம்-இந்தியா இடையே கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவது குறித்தும் விவாதித்தனர்.
அதேபோல குடியரசு தினத்திற்காக அபுதாபி பட்டத்து இளவரசர் இந்திய பிரதமருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். முக்கியமாக அபுதாபி பட்டத்து இளவரசர் அமீரகத்தில் இருந்துவரும் இந்தியர்களுடனான உறவுமுறைகள் பல்துறைகளில் அவர்கள் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
இருநாடுகளுக்கு இடையே பொருளாதாரம், வர்த்தகம், தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் இன்னும் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர்.
இந்த தொலைபேசி உரையாடல் குறித்து நேற்று இந்திய பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘‘எனது நண்பர் அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் அன்பான தொலைபேசி உரையாடலை நிகழ்த்தினார்.
அவர் அமீரகத்தில் இந்தியர்களின் நல்வாழ்வில் தனிப்பட்ட கவனம் செலுத்தி வருவதற்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இருநாட்டு ஒத்துழைப்பில் தொற்று நோய் பரவலில் கூட எந்தவித தொய்வும் ஏற்படவில்லை. எங்களது உறவுகளை மேம்படுத்தவும், பன்முகப்படுத்தவும் ஒப்புக்கொண்டுள்ளோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.