பாலாஸ்தீன முன்னாள் அதிபரான யாசர் அரபாத் எகிப்தில் பிறந்தார். கல்லூரியில் படிக்கின்றபோதே யூதர்கள் பற்றிய வாசிப்புகளை கேட்டறிந்து யூத மற்றும் சியோனிஸம் பற்றி நன்றாக புரிந்துகொள்ள ஆரம்பித்தார். சிவில் பொறியாளர் பட்டம் பெற்ற இவர் 1948-ல் நடைபெற்ற அரபு-இஸ்ரேல் போரின்போது கல்லூரியில் இருந்து வெளியேறி அரபு படைகளுடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராக போரிட்டார்.

1990- இல் யாசர் அரபாத் தனது 61- ஆவது வயதில் சுஹா தாவில் என்ற 27 வயது பாலஸ்தீன கிறிஸ்தவ பெண்ணை மணந்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் பிறந்தார். 2004- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11- ஆம் தேதி தனது 75- ஆவயதில் இறந்துவிட்டார். இவருடைய சாவில் ஏகப்பட்ட மர்மங்கள் நிறைந்திருந்தன.
மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:-
• 1789 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அதிபராக ஜார்ஜ் வாஷிங்டன் தேர்வு செய்யப்பட்டார்.
• 1794 – பிரெஞ்சுக் குடியரசு முழுவதும் அடிமைத்தொழில் சட்டவிரோதமாக்கப்பட்டது.
• 1834 – இலங்கையின் ஆங்கில பத்திரிகை சிலோன் ஒப்சேர்வர் முதன் முதலாக வெளியிடப்பட்டது.
• 1899 – பிலிப்பைன்ஸ்-அமெரிக்கப் போர் ஆரம்பமானது.
• 1936 – முதற்தடவையாக ரேடியம் இ என்ற செயற்கைக் கதிரியக்க மூலகம் உருவாக்கப்பட்டது.
• 1966 – ஜப்பான் போயிங் விமானம் டோக்கியோவில் வீழ்ந்ததில் 133 பேர் கொல்லப்பட்டனர்.
• 1976 – குவாத்தமாலா , ஹொண்டுராஸ் நிலநடுக்கத்தில் 22,000 பேர் இறந்தனர்.
• 1997 – இஸ்ரேலில் இரண்டு வானூர்திகள் வானில் மோதிக்கொண்டதில் 73 பேர் கொல்லப்பட்டனர்.
• 1998 – ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற 6.1 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 5,000 பேர் கொல்லப்பட்டனர்.
• 2007 – ஒலியை மிஞ்சிய வேகத்தில் செல்லும் ரஷ்ய-இந்திய “பிரமாஸ்” ஏவுகணை ஒரிசா ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.