மேலும் மாநில பொதுப்பணித்துறையால் ‘அசாம் மாலா’ என்ற பெயரில் ரூ.5 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தவுள்ள சாலைப்பணிகளையும் மோடி தொடங்கி வைக்கிறார். இந்தப்பணி 15 ஆண்டுகளில் நிறைவடையும் என்று மாநில நிதி மந்திரி ஹிமந்தா பிஸ்வா தெரிவித்தார்.
முன்னதாக வருகிற 6- ஆம் தேதி அசாம் வரும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் 8 லட்சம் தோட்டத்தொழிலாளர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
அசாமில் விரைவில் சட்டமன்றத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திரமோடியின் இந்தப் பயணம் அமைந்துள்ளது. மேலும் கடந்த 15 நாட்களில் அசாமுக்கு பிரதமர் மோடி 2- ஆவது முறையாகச் செல்வது குறிப்பிடத்தக்கது.