சுவீடனின் சுற்றுக்சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், தொடர்ந்து ஆதரவு தெரிவிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்

கிரேட்டா தன்பெர்க்
இந்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதுமுள்ள விவாசயிகள் ஒன்றாக இணைந்து தலைநகர் டெல்லியின் எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லிக்குள் விவசாயிகள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக பல்வேறு அடுக்கு தடைகளை டெல்லி போலீசார் ஏற்படுத்ததியுள்ளனர். பேரிகார்கடுகளை வரிசையான வைத்து சாலைகளில் ஆணிகளை புதைத்து வைத்துள்ளனர். மேலும், இணையதள சேவையை முடக்கியுள்ளனர். மின்சாரம், கழிப்பிட வசதிகளையும் துண்டித்துள்ளனர்.







