எல்லை பதற்றத்துக்கு காரணம் இந்தியாதான். அடாவடியில் சீனா!

பீஜிங்:

சீனா-இந்தியா எல்லையில் பதட்டங்களுக்கு மூல காரணம் இந்தியாதான் என்று சீனா குற்றம் சாட்டியுள்ளது.

எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்தியாவை விட சீனா விட பல மடங்கு அத்துமீறியது என்று மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்திருந்த நிலையில் சீனா இவ்வாறு கூறியுள்ளது.

கடந்த ஜுன் மாதம் கல்வான் எல்லைப்பகுதியில் இந்திய-சீன வீரர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் உயிர்ச்சேதம் எற்பட்டது. இதனால் கிழக்கு லடாக் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்தியாவை விட சீனா விட பல மடங்கு அத்துமீறியது என்று மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.

இந்தியாதான் எல்லையில் அத்துமீறுகிறது என்று சீனா இதற்கு பதில் அளிக்கும் வகையில் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பர்க் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறியதாவது:– இந்தியாதான் சீனா-இந்தியா எல்லையில் பதட்டங்களுக்கு மூல காரணம். நீண்ட காலமாக, சீனாவின் எல்லையை ஆக்கிரமிக்கும் முயற்சியில் இந்தியப் பகுதியின் எல்லைப் பகுதியில் அடிக்கடி அத்துமீறல் செயல்களை நடத்தி வருகிறது. தொடர்ந்து சர்ச்சைகள் உராய்வுகளை உருவாக்கியது.

 உடன்படிக்கைகளைப் பின்பற்றவும், எல்லைப் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மையை உறுதியான நடவடிக்கைகளுடன் நிலைநிறுத்தவும் இந்திய தரப்பை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here