ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் மீண்டும் அமெரிக்கா..! ஜோ பிடென் நிர்வாகம் முடிவு..!

அமெரிக்க அதிபராக பதவி வகித்த டொனால்ட் டிரம்ப் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விலகிய ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் மீண்டும் இணைய உள்ளதாக பிடென் நிர்வாகம் இந்த வாரம் அறிவிக்க உள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் , ஜெனீவாவில் உள்ள ஒரு மூத்த அமெரிக்க இராஜதந்திரி அமெரிக்கா ஜெனீவாவை தளமாகக் கொண்ட மனித உரிமைக் கவுன்சிலில் ஒரு பார்வையாளராக இணைவதை அறிவிப்பார்கள் என அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பார்வையாளராக இணைந்து, பிறகு வாக்கெடுப்பின் மூலம் மட்டுமே முழு உறுப்பினராக அமெரிக்காவால் மாற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் மீதான அதன் சமமற்ற கவனம் காரணமாக 2018’ஆம் ஆண்டில் மனித உரிமை கவுன்சிலிலிருந்து டிரம்ப் விலகினார். ஐக்கிய நாடுகள் சபையின் அப்போதைய அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி கோரிய சீர்திருத்தங்களின் விரிவான பட்டியலை சந்திக்க அது தவறிவிட்டதை அடுத்து இந்த முடிவை எடுப்பதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.

மனித உரிமை கவுன்சில் இஸ்ரேல் மீது தொடர்ந்து கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல், தற்போது சீனா, கியூபா, எரித்ரியா, ரஷ்யா, வெனிசுலா ஆகிய நாடுகளையும் உள்ளடக்கிய அமைப்பின் உறுப்பினர் விஷயத்தில் டிரம்ப் நிர்வாகம் பிரச்சினையை எடுத்தது. இவை அனைத்தும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கவுன்சில் இன்னும் சீர்திருத்தப்பட வேண்டும் என்று பிடென் நிர்வாகமும் நம்புவதாக அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். ஆனால் மாற்றத்தை ஊக்குவிப்பதற்கான சிறந்த வழி அதனுடன் கொள்கை ரீதியான முறையில் ஈடுபடுவதாகும்.

உலகெங்கிலும் கொடுங்கோன்மை,  அநீதிகளை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு இது ஒரு முக்கியமான மன்றமாக இருக்கக்கூடும் என்று அந்த அதிகாரி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here