சுற்றுலா வரும் பயணிகளுக்கு 100 அமெரிக்க டாலர் இலவசம்!

அமெரிக்கா;

கலிஃபோர்னியாவில் உள்ள சண்டா மரியா பள்ளத்தாக்கிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 100 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக பல்வேறு உலக நாடுகளில் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் அனைத்து துறைகளின் பொருளாதாராம் பெரும் சரிவை சந்தித்தது.

இதில் பெரிதும் பாதிக்கப்பட்டது சுற்றுலாத்துறை எனக்கூறலாம். ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட பிறகு அனைத்து நாடுகளும் தங்கள் பொருளாதாரத்தை உயர்த்த பெரிதும் முயற்சி செய்கின்றன.

அந்த வகையில் கலிஃபோர்னியாவில் சண்டா மரியா என்ற அழகிய பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. காண்போரை கண்கவர வைக்கும் அளவிற்கு அழகிய இயற்கை காட்சிகள் நிறைந்த சுற்றுலாத்தலம் இது.

கொரோனா பாதிப்பால் பெரும் வீழ்ச்சியை சந்தித்த இந்த சுற்றுலா தளத்தை மீட்கும் நடவடிக்கைகளில் அப்பகுதி நிர்வாகம் புதிய யுக்தியில் ஈடுபட்டுள்ளது.

சுற்றுலா வரும் பயணிகளுக்கு 100 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.7,200 ) இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இச்சலுகை பிப்ரவரி 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதன்மூலம் அங்கு சுற்றுலாப் பயணிகளின் வரவை அதிகரிக்கலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here