பிப்ரவரி 10 .. வரலாற்றில் இன்று -உயிரியலில் மிகச் சிறப்பாக பங்காற்றியவர்

உயிரியலில் மிகச் சிறப்பாக பங்காற்றிய ஜான் பிராங்க்ளின் எண்டர்ஸ் (John Franklin Enders) 1897ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார்.

இவர் பாக்டீரியாக்களின் வீரியத்தன்மை மற்றும் உடலின் நோய் எதிர்ப்புசக்தியின் ஆற்றல் குறித்து சில காரணிகளை ஆராய்ச்சி செய்து வந்தார்.

அதன்பிறகு தன் குழுவினருடன் இணைந்து பொன்னுக்கு வீங்கி அம்மை நோயை உண்டாக்கும் வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதைக் குணப்படுத்தும் நோய் எதிர்ப்புசக்தி மருந்தையும் கண்டறிந்தார்.

போலியோ தடுப்பு மருந்து தயாரிப்புக்கு காரணமாக அமைந்த புதிய, ஆபத்து இல்லாத முறையிலான போலியோமையெலிட்டிஸ வைரஸ்கள் உற்பத்திக்கான ஆய்விற்கு டி.ஹெச்.வெல்லர், எஃப்.சி.ராபின்ஸ் இருவருடன் இணைந்து இவருக்கு 1954ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இவர்களது ஆராய்ச்சி மூலம் விஞ்ஞானிகளால் போலியோ வைரஸ்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடிந்தது. இந்த ஆராய்ச்சி முறை, போலியோ மருந்து தயாரிப்புக்கு மட்டுமல்லாமல், பிற வைரஸ்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள உதவியது.

வைரஸ்கள் குறித்த ஆராய்ச்சியில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய நவீன தடுப்பு மருந்துகளின் தந்தை ஜான் பிராங்க்ளின் எண்டர்ஸ் 1985ஆம் ஆண்டு மறைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here