விசாரணையின் அரசியலமைப்பு செல்லுபடியை தீர்மானிக்க பெரும்பான்மையான செனட்டர்களின் ஆதரவு தேவை எனும் சூழலில் 56-44 பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேறியது.
மேரிலாந்தின் பிரதிநிதி ஜேமி ராஸ்கின், ஒரு வீடியோவுடன் தீர்மானம் மீதான விவாதத்தை தொடங்கி வைத்தார். இது எதிர்ப்பாளர்கள் கேபிடல் பகுதியில் நடத்திய தாக்குதல் எவ்வாறு அழிவை உருவாக்கியது என்பதைக் காட்டுகிறது.
ட்ரம்பின் பேச்சுக்கு கூட்டம் எவ்வாறு பிரதிபலித்தது என்பதை வீடியோ காட்டுகிறது, அதில் அவர் ஆதரவாளர்களை கேபிட்டலுக்கு செல்லுமாறு வலியுறுத்தினார்.
13 நிமிட வீடியோ ஜனவரி 2’ ஆம் தேதி ட்ரம்ப்பின் ட்வீட்டையும் காட்டியது.
முன்னாள் அடிபர் டிரம்பிற்கு ஆதரவாக வாதிட்ட வழக்கறிஞர் குழு குற்றச்சாட்டு விசாரணை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று வாதிட்டதுடன், டிரம்ப் கலவரக்காரர்களைத் தூண்டவில்லை என்றும் வாதிட்டது. தேர்தல் குறித்த அவரது பேச்சு அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்தத்தால் பாதுகாக்கப்படுகிறது என்று குழு வாதிட்டது.
இதையடுத்து டிரம்ப் மீதான விசாரணையை தொடரலாமா என்பது குறித்து நடந்த வாக்கெடுப்பில், 56-44 எனும் வீதத்தில் டிரம்பிற்கு எதிராக வாக்களிக்கப்பட்டதால் அவர் மீதான விசாரணை தொடர்வது உறுதியாகியுள்ளது.
இந்த விசாரணையில், டிரம்ப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டால் 2024’இல் அதிபர் பதவிக்கு அவரால் போட்டியிட முடியாது என்பதோடு, எந்த அரசு சார்ந்த பதவிகளிலும் நீடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.