அதான் அவர் வந்துட்டார்ல.. இனி உங்களுக்கு வேலை இல்லை…

சென்னை: இந்திய அணியின் இரண்டு இளம் பவுலர்கள் தற்போது ஸ்குவாடில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வி அடைந்த விரக்தியில் உள்ளது. இதனால் இரண்டாவது டெஸ்டுக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி தேர்வு செய்ய போகும் பவுலர்கள் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணியில் அஸ்வின், வாஷிங்க்டன் சுந்தர் இரண்டு பேரும் கண்டிப்பாக ஆடுவார்கள் என்று கூறப்படுகிறது. இது போக மேலும் ஒரு ஸ்பின் பவுலர் களமிறக்கப்படுவார்.

இந்த ஸ்பின் பவுலர் யார் என்ற குழப்பம் இன்னும் நீடித்து வருகிறது. காயம் காரணமாக முதல் டெஸ்டில் ஆடாத அக்சர் பட்டேல் அணியில் மீண்டும் இணைந்துள்ளார். குல்தீப் யாதவும் அணியில் மீண்டும் இணைந்துள்ளார். இதனால் இரண்டு பேரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

அக்சர் பட்டேல் மீண்டும் வந்துள்ளதால் நதீம் மற்றும் ராகுல் சாகர் ஸ்குவாடில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 15 பேர் கொண்ட அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். வலைப்பயிற்சியில் மட்டுமே இவர்கள் இருவரும் பவுலிங் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

இந்திய அணியில் இருந்து நதீம் நீக்கப்பட்டது கூட தவறான விஷயமாக பார்க்கப்படவில்லை. முதல் டெஸ்டில் நதீம் சரியாக ஆடவில்லை. இதனால் அவர் நீக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் ராகுல் சாகர் நீக்கப்பட்டது பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

இந்திய அணியில் இணைய வேண்டும் என்று இவர் ஆர்வத்துடன் இருந்தார். நதீம் செய்த தவறால் தற்போது சாகருக்கும் வாய்ப்பு பறிபோய் உள்ளது. இவர் நீண்ட மாதங்களாக இந்திய அணியில் இணைய தீவிரமாக முயன்று வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணியில் இவர் சிறப்பாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here