கடத்தப்பட்ட 10 வயது சிறுமி.. காட்டிக் கொடுத்த பேஸ்புக் லைவ்

லூசியானாவில் கடந்த ஞாயிறு அன்று ஜலிஸா லஸேல் எனும் சிறுமி காணாமல் போனார். Amber Alert எனும் ‘குழந்தை கடத்தல் அவசர எச்சரிக்கை’ குழு ஜலிஸா காணாமல் போனது குறித்து அப்பகுதி மக்களிடம் தகவல் தெரிவித்திருந்தது. மேலும், நிசான் அல்டிமான 2012 சில்வர் நிற காரில் அவர் காணாமல் போயிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

இந்த செய்தியை டியன் மெரிக் மற்றும் பிராண்டன் ஆன்டொனி ஆகியோரும் அறிந்திருந்தனர். இந்நிலையில், Burton Plantation நெடுஞ்சாலையில் இருவரும் சென்றுக் கொண்டிருந்த போது, அங்கு ஒரு மறைவில் சில்வர் நிற கார் நின்றுக் கொண்டிருந்ததை கவனித்தனர்.

உடனே 911க்கு தொடர்பு கொண்டு விஷயத்தைக் கூறி, தங்களது குப்பை லாரி மூலம் கார் வெளியே செல்ல முடியாமல் அணை கட்டி தடுத்து நிறுத்தினர். ஒரு நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, காருக்குள் இருந்து சிறுமி ஜலிஸாவை பத்திரமாக மீட்டனர். இவை அனைத்தையும் டியன் மெரிக் பேஸ்புக்கில் லைவ் செய்தார்.

சிறுமியை கடத்திய 33வயதான மைக்கேல் செரியல் என்பவரும் கைது செய்யப்பட்டார். தான் காப்பாற்றப்பட்ட போது சிறுமி ஜலிஸா ஆனந்த மிகுதியில் அழுதார் என்று ஆன்டொனி கூறினார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த பாலியல் குற்றவாளிக்கு லூசியானா சட்டத்தின் கீழ் பரோல், தண்டனை குறைப்பு போன்ற எந்த கருணையுமின்றி ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here