பலி எண்ணிக்கை 20-ஆக அதிகரிப்பு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் கடந்த 12- ஆம் தேதி மதியம் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே சில தொழிலாளர்கள் பலியானார்கள். படுகாயம் அடைந்தவர்கள் சிவகாசி, சாத்தூர், மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழப்பு ஏற்பட்டதால் பலி எண்ணிக்கை உயர்ந்தது. நேற்று முன்தினம் வரை பலியானோர் எண்ணிக்கை 19-ஆக இருந்தது.
இந்நிலையில், நேற்று சாத்தூர் அமீர்பாளையத்தை சேர்ந்த வனராஜ் (52), மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பலியானோர் எண்ணிக்கை 20- ஆக அதிகரித்துள்ளது.