நாளை முதல் ரூ.10,000 அபராதம்!
முதலில் நவம்பர் நீட்டிக்கப்பட்ட அவகாசம் அதனைத் தொடர்ந்து டிசம்பர், ஜனவரி என நீண்டது. கடைசியாக பிப்ரவரி 15ஆம் தேதி கடைசி நாள் என வருமான வரித்துறை தெரிவித்தது.


அந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைவதால் பொதுமக்கள் தங்கள் வருமான வரி கணக்கை இன்று மாலைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இல்லை என்றால் நாளை ரூ.10,000 அபராதம் செலுத்த நேரிடும். அதுமட்டுமல்லாமல் மார்ச் 31ஆம் தேதிக்கு பிறகு கணக்கை தாக்கல் செய்ய முடியாது என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.