விவசாயிகளை நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு

டெல்லியின் எல்லைகளில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து மகாத்மா காந்தியின் பேத்தி ஆதரவு தெரிவித்தார்.

நாடாளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்கையில், நாம் நாட்டுக்காக பணியாற்றுகிறோம். வேளாண் சட்டங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை வரும்படியும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்படியும் விவசாயிகளிடம் மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாசார்யா திடீரென காசிப்பூர் எல்லைக்கு சென்று விவசாயிகளை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

தாரா காந்தி பட்டாச்சார்யா

காந்தி பவுன்டேஷனின் பணியாளர்களுடன் தாரா காந்தி பட்டாச்சார்யா காசிப்பூர் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து பேசினார். அப்போது தனது ஆதரவை தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ராகேஷ் டிக்கைட்டும் மேடையில் இருந்தார். தாரா காந்தி பட்டாச்சார்யா பேசுகையில் கூறியதாவது: எந்தவொரு அரசியல் கட்சிக்காகவும் நான் இங்க வரவில்லை. என்னுடன் போலீஸ் பாதுகாவலர்களும் இல்லை. நான் 87 வயதான நாட்டின் மூத்த குடிமகள்.

விவசாயிகள் போராட்டம் (கோப்பு படம்) 

நமது எல்லோர் வாழ்க்கைக்கும் உணவு அளிக்கும் விவசாயிகளுக்காக நாங்கள் இங்கு வந்துள்ளோம். விவசாய சகோதரர்கள் ஆதாயம் அடையவில்லை என்றால், நாடும் பலன் அடையாது. நான் எப்போதும் உண்மையுடன் நிற்பேன். எனக்கு நிச்சயமாக அரசியல் அறிவு கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். டெல்லியின் பல எல்லைகளில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளின் போராட்டம் 80 நாட்களை தாண்டி தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here