தமிழகத்தின் புதிய தொழில் கொள்கைகள் இன்று வெளியீடு

ரூ.28 ஆயிரம் கோடி முதலீட்டில் 28 புதிய தொழில் திட்டங்கள்- 

தமிழகத்தின் புதிய தொழில் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் கொள்கை களை முதல்வர் பழனிசாமி இன்று வெளி யிடுகிறார். அப்போது, ரூ.28 ஆயிரத்து 53 கோடி மதிப்பில் 28 புதிய தொழில் திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

தமிழக அரசின் தொழில்துறை சார்பில் 2 முறை உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடத்தப்பட்டது. கடந்த 2015-இல் அப்போதைய முதல்வர் ஜெய லலிதா தலைமையில் முதலாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த 2019 ஜனவரியில் முதல்வர் பழனிசாமி தலைமையில் 2-ஆவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து அதே ஆண்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார்.உலக முதலீட்டாளர் மாநாடு, முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் போன்ற காரணங்களால் தமிழகத்துக்கு அதிக அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகின்றன.

முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தொழில் முதலீட்டுக் கான குழு, குறிப்பிட்ட இடைவெளியில் கூடி, புதிய முதலீடுகளுக்கான ஒப்புதல் களை வழங்கி வருகிறது. இதையடுத்து, அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப் பட்டு, அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங் கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த ஜனவரி 29ஆம் தேதி முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த அமைச் சரவைக் கூட்டத்தில் தொழில் முதலீடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பொருளா தாரத்தை சீரமைக்க அமைக்கப்பட்ட ரங்கராஜன் குழுவின் பரிந்துரைகள், கரோனா காரணமாக வெளிநாடுகளில் இருந்து வெளியேறும் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அப்போதைய தலைமைச் செயலர் கே.சண்முகம் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கை தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

அதன்பின்னர், 34 முக்கிய முதலீடு களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அத்துடன், புதிய தொழில் கொள்கையை வெளியிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள 34 திட்டங்கள் மூலம் ரூ.52 ஆயிரத்து 257 கோடி முதலீடு மற்றும் 93 ஆயிரத்து 935 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக உள்ளது.

அனுமதிக்கப்பட்ட 34 திட்டங்களில் 28 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப் பந்தம் இன்று கையெழுத்தாக உள்ளது. இதற்கான விழா, சென்னை ராஜா அண்ணா மலைபுரம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழக அரசின் தொழில்துறை சார்பில் நடக்கிறது. இந்த விழாவில், தமிழகத்தின் புதிய தொழில் கொள்கை-2021, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில் கொள்கை -2021 ஆகிய இரு தொழில் கொள்கைகளை முதல்வர் பழனிசாமி வெளியிடுகிறார்.

இதைத் தொடர்ந்து, ரூ.28 ஆயிரத்து 53 கோடி மதிப்பில் 68,775 பேருக்கு வேலை அளிக்கும், 28 புதிய தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங் கள் முதல்வர் முன்னிலையில் கையெழுத் தாகின்றன. இதுதவிர, ரூ.3,489 கோடி மதிப்பிலான 13 முடிவுற்ற தொழில் திட்டங்களையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

மேலும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை, திருவள்ளூர் மாவட்டம் மாநல்லூர், காஞ்சிபுரம் – ஒரகடம் பகுதி-2, தருமபுரி- தடாங்கம், புதுக்கோட்டை – ஆலங்குடி, செங்கல்பட்டு – ஆலந்தூர் பகுதி-2, நாமக்கல் – ராசம்பாளையம், திருவண்ணாமலை – பெரியகோளப்பாடி, சேலம் – பெரிய சீரகப்பாடி, உமையாள் புரம் ஆகிய இடங்களில் அமைக்கப் பட்டுள்ள தொழில்பூங்காக்கள், தொழிற் பேட்டைகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். சிறப்பாக செயல் பட்டு வரும் தொழில் நிறுவனங்களுக்கு விருதுகளும் வழங்கப்பட உள்ளன.

நிதின் கட்கரியுடன் சந்திப்பு

இன்று மாலை அதே ஓட்டலில் தமிழக அரசின் சார்பில் சாலை பாதுகாப்பு திட்டங்கள் அர்ப்பணிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சிறந்த நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது. இதில், பங்கேற்கும் முதல்வர் பழனிசாமி, முதல் வரின் சாலை பாதுகாப்பு விருதுகளை வழங்குகிறார். சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் மத்திய சாலை போக்குவரத் துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை யில் அமலாக்கம் சார்ந்த சாதனங்கள், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத் துவமனையில் தீவிர சிகிச்சை மையத் துக்கான சாதனங்களை மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.

இந்நிகழ்ச்சியில், காணொலி மூலம் பங்கேற்கும் உலக வங்கி துணைத் தலைவர் ஹார்ட்விக் ஷ்காபர், சாலை பாதுகாப்பு குறித்த குறும்படத்தை வெளியிடுகிறார். நிகழ்ச்சி முடிவில், தமிழக சாலை திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் முதல்வர் பழனிசாமி பேசுவார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here