வரலாற்றில் இன்று : அறிவியலாளர், தத்துவமேதை, ஓவியர்-எர்ன்ஸ்ட் ஹேக்கல்

இவர் பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, ஆயிரக்கணக்கான புதிய உயிரினங்களைக் கண்டறிந்து பெயர் சூட்டினார். எல்லா உயிரினங்களையும் உள்ளடக்கிய இனவழிப் படிவரிசையை உருவாக்கினார்.

எர்ன்ஸ்ட் ஹேக்கல்

பல வகையான உயிரினங்கள் குறித்த விவரங்களுடன் ‘ஆர்ட் ஃபாம்ஸ் ஆஃப் நேச்சர்” என்ற நூலை எழுதினார். இவர் 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

இவர் தான் முதலில் உயிரினங்களை ஒரு செல் உயிரி, பல செல் உயிரி என பிரித்தவர். மனிதரை 10 இனங்களாகப் பிரித்து, அதற்கான காரணத்தை விளக்கினார்.

‘இந்திய துணைக் கண்டம்தான் மனிதகுலத்தின் பிறப்பிடம்” என்று ‘தி ஹிஸ்ட்ரி ஆஃப் கிரியேஷன்” என்ற நூலில் விரிவாக எழுதியுள்ள இவர் 1919ஆம் ஆண்டு மறைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here