காவல்துறையின் புது ஐடியா!!
இணைய குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தற்போது பெரும்பாலான குற்றங்கள் இணைய உதவியுடன் தான் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.
அதன்படி ஒரு நபர் ஆபாசமான தகவல்கள் எதைத் தேடினாலும் அவர் குறித்து தகவல்கள் அனைத்தும் காவல்துறையினருக்கு சென்றுவிடும். அதன்பிறகு அந்த நபருக்கு1090 என்ற எண்ணில் இருந்து எச்சரிக்கை குறுஞ்செய்தி வரும்.
இந்த திட்டத்தை உத்தரப்பிரதேச அரசும், காவல்துறையினரும் சேர்ந்து கொண்டு வந்துள்ளனர். இந்த திட்டத்திற்கு அம்மாநில மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் இது எல்லா மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.