அறுவடை தொடங்கியுள்ளதால், ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் 15 பேர் போராட்டத்தில் இருந்தால் போதும் என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.காசிபுர் விவசாயிகள் போராட்டம் இடம்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியின் காசிபுர், திக்ரி, சிந்து ஆகிய எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26- ஆம் தேதி போராட்டத்தை தொடங்கினர்.
மத்திய அரசு இதுவரை பிடிக்கொடுக்காததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு எல்லையிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
வட மாநிலங்களில் பசந்த் பஞ்சமி விழா கொண்டாடப்பட்டது. இது குளிர்காலம் சென்று அறுவடைக்காலம் தொடங்குவதை குறிக்கும்.
உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இனிமேல் அறுவடைக்காலம். இதனால் விவசாயிகள் சொந்த இடங்களுக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் போராட்டத்தை தொடர் ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் 15 பேர் இருந்தால் போதும். மற்றவர்கள் சொந்த இடம் சென்று அறுவடை பணியை மேற்கொள்ளவும் என விவசாயிகள் சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளது.
இதனால் காசியாபாத் எல்லையில் விவசாயிகள் பெருமளவில் குறைந்துள்ளனர். இருந்தாலும் அவர்கள் போராட்டம் குறித்த தகவல்களை பரப்பிக் கொண்டே இருப்பார்கள்.
காசிபுர் எல்லையில் போராடி வரும் விவசாயத் தலைவர் குர்மீத் சிங் கூறுகையில் ‘‘தற்போது 4 ஆயிரம் முதல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் போராட்டக்களத்தில் தேவையில்லை என முடிவு செய்துள்ளோம். அதேவேளையில் அரசு எப்போது வேண்டுமென்றாலும் விவசாயிகளை இந்த இடத்தில் இருந்து அகற்ற முயற்சி செய்யும் என்பதை விவசாயிகள் அறிந்துள்ளனர்.
அதேவேளையில் போராட்டம் குறித்து ஏதாவது தகவல் தெரிவிக்க வேண்டுமென்றால் அருகில் உள்ள விவசாயிகள் தயாராக இருப்பார்கள். 3 மணி நேரத்திற்குள் போராட்ட களத்திற்கு வந்துவிடுவார்கள். 24 மணி நேரத்திற்கள் ஒரு லட்சம் பேரை திரட்ட முடியும்’’ என்றார்.