கிம்மின் மனைவி பொது நிகழ்ச்சியில் பிரவேசம்!

  – தொடரும் கண்ணாமூச்சு விளையாட்டுகள்!

வல்லரசு நாடான அமெரிக்காவுக்கே அவ்வப்போது சவால் விடும் வடகொரியோ மர்ம செய்திகளை உலகிற்கு தந்து கொண்டே இருக்கும். வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்.
இவர் சில மாதங்களுக்கு முன்னாள் நடுவில் திடீரென காணாமல் போனார். பின்னர் அதிரடியாக திடீரென பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.இந்நிலையில்,ஒரு வருட காலமாகவே கிம் ஜாங் மனைவி ரி சோல் ஜூ, எந்த பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை.

அவரின் உடல்நலத்தில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக பல வதந்திகள் வெளியாயின.2009 இல், நடந்த கிம் ஜாங் ,  ஜூவின் திருமணம் 2011 இல், நாட்டின் தலைமை பொறுப்பை கிம் ஜாங் ஏற்ற பிறகே, வெளியாகின .

அவர்களுக்கு மூன்று குழந்தைகள் என்கின்றன செய்திகள். ஆனால், எத்தனை குழந்தைகள் உள்ளன என்பது அதிகாரப்பூர்வமாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் முன்னாள் தலைவர் இரண்டாம் கிம் ஜாங் பிறந்த நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில், மனைவி ஜூ, உன் பங்கேற்றனர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here