ஜனநாயகம் மரணம் எய்துவிட்டதா?

 

கோலாலம்பூர்:
நாடாளுமன்றத்தை பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் இடைநீக்கம் செய்துவிட்ட பின்னர் மலேசியாவில் ஜனநாயகம் மரணித்துவிட்டது என்று அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அமாட் ஸாஹிட் ஹமிடி வர்ணித்தார்.

கோவிட்-19 நிலைமை மோசமடைந்து வருவதைக் காரணமாக வைத்து அவசரகாலத்தைப் பிரகடனம் செய்த அரசாங்கம் நாடாளுமன்றத்தைத் தற்காலிகமாக முடக்கிவைப்பது என்ற முடிவையும் அறிவித்தது.

இவ்விவகாரம் தொடர்பில் மக்களவை துணை சபாநாயகர் டத்தோ அஸாலினா ஓஸ்மான் சடை் குரல் கொடுத்திருப்பது அவருக்கானது மட்டுமல்ல, நம் அனைவரையும் பிரதிநிதித்துதான் குரல் எழுப்பியிருக்கிறார் என்று பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினருமான ஸாஹிட் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றம் முடக்கப்பட்டது தொடர்பில் அட்டர்னி ஜெனரலுக்கு அஸாலினா அனுப்பிய நீண்ட கடிதமானது சட்டம், அரசியல் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல மாறாக மக்களின் குரலை அது பிரதிபலித்திருக்கிறது என்று அவர் கூறினார்.

ஜனவரி 11ஆம் தேதி தொடங்கி நாடாளுமன்றம் முற்றாகச் செயலிழந்துபோய் இருக்கிறது. அவசரகாலப் பிரகடனத்தின் கீழ் நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கியிருப்பது அதனைப் பலவீனமடையச் செய்வதற்குச் சமமமானதாகும் என்று அட்டர்னி ஜெனரல் டான்ஸ்ரீ இட்ருஸ் ஹருணுக்கு அனுப்பிய அக்கடிதத்தில் அஸாலினா புகார் செய்திருக்கிறார்.
ஙெ்யற்குழு அளவிலான கூட்டங்கள் உட்பட நாடாளுமன்றத்தின் அனைத்து ஙெ்யற்குழுக்களின் நடவடிக்கைகளையும் முடக்கிவைக்குமாறு அட்டர்னி ஜெனரல் அலுவலகம் அரங்ாங்கத்திற்கு ஆலோங்னை வழங்கியிருக்கிறது.
மெய்நிகர் வழியாகவும் அவை நடத்தப்படுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது தொடர்பில் பெங்கெராங் நாடாளுமன்ற உறுப்பினருமான அஸாலினா அக்கடிதத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

குறைந்த எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பது, ஏற்புடைய அமர்வு நேரம், நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரலையாக வழங்குவது உள்ளிட்ட நடைமுறைகளைப் பின்பற்றி மற்ற நாடுகளில் நாடாளுமன்றக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆனால், நம் நாட்டில் அந்த நடைமுறை ஏன் மறுக்கப்படுகிறது என்றும் அஸாலினா கேள்வி எழுப்பியிருந்தார். நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடக்கப்பட்டதுபோல் நடப்பு அமைச்சரவையும் இடைநீக்கம் செய்யப்பட்டு அவசரகால அமைச்சரவைக் கட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களுடன் ஆகஸ்டு 1ஆம் தேதி வரை அமைக்கப்பட வேண்டும் என்றும் அஸாலினா அக்கடிதத்தில் பரிந்துரைத்திருந்தார்.

தாம் அரசாங்க ஆதரவுப் பிரிவில் இருந்தாலும் மக்களுக்காகப் பேச வேண்டிய அவசியம் தமக்கு இருப்பதாக ஸாஹிட் சொன்னார். மக்களின் குரலாக ஒலிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையைச் ஆற்றுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

ஆனால், ஜனநாயகம் அடக்கம் செய்யப்பட்டுவிட்ட பின்னர் மக்களின் குரலும் அமைதி அடைந்துவிடும் என்ற அவர், இரவுச் சந்தைகளும் பேரங்காடிகளும் திறக்கப்படும்போது நாடாளுமன்ற அமர்வுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

இரவுச் சந்தைகளுக்குச்  செல்வதைக் காட்டிலும் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கோவிட்-19 தொற்று அபாயம் பெருமளவில் இருக்குமா என்றும் டத்தோஸ்ரீ ஸாஹிட் கேள்வி எழுப்பினார்.

அவசரகாலப் பிரகடனம், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஆகியவை அமல்படுத்தப்பட்டிருக்கும் இக்காலகட்டத்தில் கோவிட்-19 புதிய தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை அவர்  சுட்டிக்காட்டினார்.

இந்த எண்ணிக்கை மார்ச் மாதத்தில் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரமாக அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது நமது நாட்டின் மிகச்சிறந்த அடைவு நிலையா? மிகப்பெரிய வெற்றியா என்பதை பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம்தான்  சொல்ல வேண்டும் என்று அவர் கிண்டலடித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here