மே 3 ஆம் தொடங்கப்பட்ட ஸ்மார்ட்ஃபோன் செயலி மூலம் 8,599 தவறிழைக்கும் முதலாளிகள் குறித்து புகாரினை பெற்றிருக்கிறோம் – சரவணன் தகவல்

கோலாலம்பூர்: தவறிழைக்கும் முதலாளிகள் குறித்து ஊழியர்கள் புகார் தெரிவிக்க ஸ்மார்ட்ஃபோன் செயலி மே 3 முதல் தொடங்கியதில் இருந்து 8,599 புகார்களைப் பெற்றுள்ளதாக மனிதவள அமைச்சர் எம் சரவணன் மக்களவையில் தெரிவித்தார்.

8,200 க்கும் மேற்பட்ட புகார்கள் மலேசியர்களிடமிருந்து வந்தவை என்று அவர் கூறினார். அவரது அமைச்சகம் 7,502 புகார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது. மே மாதம் உருவாக்கப்பட்ட தொழிலாளர்களுக்கான  ஸ்மார்ட்போன் செயலி மூலம் புகார் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டது.

ஒப்பந்த தகராறுகள், சம்பளத்தை தாமதமாக செலுத்துதல், விடுப்பில் செல்ல வேண்டிய கட்டாயம், நியாயமற்ற பணிநீக்கம், வெளிநாட்டு தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு மற்றும் முறையற்ற சிகிச்சை உள்ளிட்ட 14 வகையான புகார்களை இந்த ஆஃப் உள்ளடக்கியது என்று எம்.குலசேகரன் (ஈப்போ பாராட்) நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here