– கேமராவில் சிக்கிய அரியவகை பறவை…!
அமெரிக்காவை சேர்ந்த கர்தினால் என்ற பறவை சிவப்பு குருவி என்று அழைக்கப்படுகிறது. இந்த பறவை கனடா, கிழக்கு ஐக்கிய அமெரிக்கா, மெக்சிகோ போன்ற இடங்களில் காணப்படும். இந்தவகை பறவைகளில் ஆண் குருவி சிவப்பு நிறத்திலும், பெண்குருவி சாம்பல் நிறத்திலும் காணப்படும்.
ஆனால், ஆணும் பெண்ணும் கலந்தது போல காட்சியளிக்கும் ஒரு பறவை 10 லட்சத்தில் ஒரு பறவையைத்தான் காண முடியும். அதில் ஒரு பாதி சிவப்பாகவும், மறுபாதி சாம்பல் நிறத்திலும் காணப்படும். இந்த அரிய பறவையை காண்பது கடினமான ஒன்றாகும். ஆனால் இவ்வாறு ஆணும், பெண்ணும் கலந்த வகையில் காணப்படும் பறவை, அமெரிக்காவில் கிராண்ட் வேலி பகுதியில் பறவை காணப்பட்டுள்ளது.
48 வருடங்களாக பறவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும், பறவை ஆர்வலரான ஜெயின் என்பவர் இந்த பறவை குறித்து அவர் கூறுகையில், ‘என் கண்ணில் இந்த அரிய வகை சிவப்பு குருவி தென்பட்டது .வழக்கத்திற்கு மாறான அழகு. இது வாழ்க்கையில் ஒரு முறை வாய்ப்பு என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.