இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்போர் பயிற்சி – சீனா கடும் எதிர்ப்பு

ஜகார்த்தா:

தென் சீனக்கடல் பகுதியில் சீனா தொடர்ந்து ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது. இதனால் அங்குள்ள நாடுகளிடையே ஒருவித பதற்றம் நிலவுகிறது.

இந்தநிலையில் 2009-ம் ஆண்டு முதல் அமெரிக்கா தலைமையில் இந்தோனேசியா கருடா ஷீல்டு என்ற பெயரில் பயிற்சி நடத்தி வருகிறது. பின்னர் விரிவாக்கம் செய்யப்பட்டு ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்பட பல நாடுகள் இந்த பயிற்சியில் இணைந்துள்ளன.

அதன்படி இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தற்போது கூட்டுப்போர் பயிற்சி நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியாவின் எம்.1 ஆப்ராம்ஸ் என்ற 5 போர் டாங்கிகள், இந்தோனேசியாவின் 2 லியோபர்ட் டாங்கிகள் என பல்வேறு ஆயுதங்கள் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன.

இதுகுறித்து இந்தோனேசிய ராணுவ செய்தித்தொடர்பாளர் ஜூலியஸ் விட்ஜோஜோனோ கூறுகையில், `ரோந்து பணியின்போது எதிரிகளின் தாக்குதல்களை முறியடிப்பதே இதன் முக்கிய நோக்கம்’ என தெரிவித்தார்.

ஆனால் இந்த கூட்டுப்போர் பயிற்சியை தனது நாட்டுக்கு அச்சுறுத்தலாக கருதி சீனா கடுமையாக எதிர்க்கின்றது. மேலும் தங்களது ராணுவ செல்வாக்கை கட்டுப்படுத்த நேட்டோவை போன்று ஒரு இந்தோ-பசிபிக் கூட்டணியை உருவாக்க அமெரிக்கா முயற்சி செய்வதாகவும் சீனா குற்றம் சாட்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here