நாடாளுமன்றம் எப்பொழுது கூடும்

நாடு இப்போது மிதமான எம்சிஓவின் கீழ் இருப்பதால், அம்னோ தலைவர் டத்தோ டாக்டர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி நாடாளுமன்றம் எப்போது மீண்டும் கூட்ட முடியும் என்பதை அறிய விரும்புகிறார்.

கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அவசரகால பிரகடனம் கோரப்பட்டதால், அவசரகால பிரகடனத்தின் போது நாடாளுமன்றக் கூட்டத்தொடரைக் கூட்டலாம் என்று மாமன்னர் கூறியிருந்ததை ஜாஹிட் சுட்டிக்காட்டினார்.

தனது முகநூல் பதிவில் “மக்கள் மற்றும் நாட்டின் நலனுக்காக நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவோம்” என்று கூறினார்.

ஜனவரி 11 ம் தேதி விதிக்கப்பட்ட அவசரநிலை, நாடாளுமன்றத்தை இடைநிறுத்தியது. கோவிட் -19க்கு எதிரான போரை நடத்த அரசாங்கத்திற்கு உதவுவதே அவசரகால நிலை என்று பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் கூறுகிறார்.

மற்றொரு முகநூல் பதிவில், ஜாஹிட் அம்னோ மற்றும் பாரிசன் தலைவர்களிடம் போட்டியாளர்கள் அளிக்கும் வெற்று வாக்குறுதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பாரிசன் நேஷனல் மற்றும் பெரிகாத்தான் நேஷனல் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது என்றார்.

அரசியல் எதிரிகள் முன்னர் பிரச்சார உரைகளின் போது அம்னோவையும் பாரிசனையும் காப்பாற்றுவதாக வெற்று வாக்குறுதிகளை அளித்ததாக ஜாஹித் கூறினார்.

15 ஆவது பொதுத் தேர்தல் வரும்போது, ​​பாரிசான் மற்றும் அம்னோ தலைவர்கள் இத்தகைய வெற்று வாக்குறுதிகளால் ஏமாறக்கூடாது என்று அவர் கூறினார். மீண்டும் ஒன்றுபடுவோம். தாமதமாகிவிடும் முன் நாடு பலப்படுத்தப்பட வேண்டும்  என்று அவர் கூறினார்.

கோவிட் -19 தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என்று முஹிடின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here