மதுரை ஐகோர்ட்டு அனுமதி
எங்கள் ஊரில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் வருடம் தோறும் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம்.
இந்த வருடம் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு மாவட்ட கலெக்டரின் அனுமதி பெறப்பட்டு இருந்தது. முழு ஏற்பாடுகளும் செய்த பின்னர் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கவில்லை.
நாளை (புதன்கிழமை) ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. எனவே தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்த மதுரை ஐகோர்ட்டு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரணை செய்த நீதிபதிகள், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தனர்.