நிலவுக்கு குறுக்கே நகரும் சர்வதேச விண்வெளி நிலையம்

நியூயார்க்:

விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையமானது நிலவுக்கு குறுக்கே சிறு துரும்பு போன்று நகரும் அரிய காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது.

நிலவை சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் கடக்கும் அரிய புகைப்படத்தை புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரூ மெக்மாத்தி தனது தொலைநோக்கி மூலம் படம்பிடித்துள்ளார்.

கலிபோர்னியாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ மெக்காத்தி(Andrew McCarthy) வானியல் அதிசயங்களை புகைப்படம் எடுப்பதில் கைத்தேர்ந்தவர். இந்நிலையில் பூமியிலிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பால் நடந்த நிகழ்வு படம் பிடிக்கப்பட்டுள்ளது.

அந்த புகைப்படத்தில் விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையமானது நிலவுக்கு குறுக்கே சிறு துரும்பு போன்று நகரும் அரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here