நேருக்கு நேர் மோத முடியவில்லை!

புது ரூட்டில் இந்தியாவை தாக்கும் சீனா!

போர்க்களத்தில் இந்தியாவில் தோற்கடிக்க முடியாத சீனா தற்போது சைபர் தாக்குதல் நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சில பகுதிகளில் திடீரென மின்தடை ஏற்பட்டது இதனால் சுமார் 12 மணி நேரம் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன மேலும் மருத்துவமனைகள் மூடப்பட்டது. இவை அனைத்தும் சீன சைபர் தாக்குதல் மூலம் நிகழ்த்த பட்டவை என மகாராஷ்டிர மாநிலத்தில் “நியூயார்க் டைம்ஸ்” செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து இந்தியாவில் துறைமுகங்களை ஹேக் செய்வதன் மூலம் அதன் கீழ் இயங்கிவரும் நிறுவனங்களையும் குறி வைத்தது. இதனை அமெரிக்கா நிறுவனமான “ரெட் எக்கோ ரெக்கார்ட் ஃப்யூச்சர்” தெரிவித்தது. இவை அனைத்திலும் சீனாவின் சதி இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே அமெரிக்கா இந்தியாவிற்கு ஆதரவளிக்க வேண்டுமென்று ஜோ பைடன் நிறுவனம் சீனாவிற்கு எதிராக குரல் கொடுக்கும் என்று அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மூத்த சட்டமன்ற உறுப்பினரான பிராங்க் பலோன் இந்தியா மீதான சீனாவின் சைபர் தாக்குதலை முறியடித்து இந்தியாவிற்கு ஆதரவளிக்க வேண்டுமென்று நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டார்.

மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்கா மூலோவாயா முக்கியத்துவம் வாய்ந்த நட்பு நாடான இந்தியாவிற்கு நாம் ஆதரவளிக்க வேண்டும் என்றும் சீனாவின் இந்த சைபர் தாக்குதலை எதிர்க்க வேண்டும் என்றும் சதி, மிரட்டல் மூலம் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் சீனாவை எதிர்ப்போம் என்று கூறியுள்ளார். இதனிடையில் இந்தியாவின் மீதான சீனாவின் சைபர் தாக்குதல் அறிக்கை பற்றி முழுமையான தகவல்களை அமெரிக்க அரசு வைத்திருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதற்கு அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து இந்தியா மீதான இணைய தாக்குதலுக்கு நான் பதிலளிக்க பணியாற்றுவோம் என்று திட்டவட்டமாக கூறினார். மும்பையில் நடந்த பிளாகவுட் அறிக்கை குறித்து வெளிவந்த செய்தி அனைத்தும் உண்மைதான் என்று மின்சாரத்துறை அமைச்சர் நிதின் ராவத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் சீனா எல்லைப் பிரச்சனையில் இந்தியாவிடம் தோல்விய சந்தித்ததால் போர்க்களத்தில் நேரடியாக மோத முடியாமல் இவ்வாறு சைபர் தாக்குதல் மூலம் மின் தடையை ஏற்படுத்துவதாக தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here