கொரோனா வைரசை பயன்படுத்தி பத்திரிக்கை சுதந்திரம் பறிப்பு

  -சீன ஊடக அறிக்கை கூறுகிறது!

சீனாவில் நடக்கும் சட்ட விரோத செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான மற்றொரு குற்றச்சாட்டில், ஒரு பத்திரிகைக் குழு, சீன அரசாங்கம் கொடிய கொரோனா வைரஸை “பத்திரிகையாளர்களைக் கட்டுப்படுத்துவதற்கான மற்றொரு வழியாக” பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

கடுமையான பாதுகாப்புக்கு கொரோனா வைரஸைக் காரணம் காட்டி, சீனா நாட்டில் கூடுதல் கண்காணிப்பு கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்த பத்திரிகைக் குழு குற்றம் சாட்டியுள்ளது.

“ஊடகவியலாளர்களைக் கட்டுப்படுத்துவதற்கான மற்றொரு வழியாக சீனா இந்த தொற்றுநோயைப் பயன்படுத்துகிறது” என்று சீனாவின் வெளிநாட்டு நிருபர்கள் கிளப் (FCCC) தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சீனாவின் வுஹான்  நகரம் கொடிய கொரோனா வைரசின் அசல் மையமாக இருந்தபோதிலும், இப்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் அங்கு யாருமே இல்லை என கூறப்படுகிறது. எனினும், உலகெங்கிலும் மில்லியன் கணக்கான உயிர்களைப் பறித்த இந்த பொது சுகாதார பேரழிவின் குற்றச்சாட்டில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் அதிகாரப்பூர்வ விவரணையை பெய்ஜிங் இன்னும் ஊக்குவித்து வருவதாக அந்த பத்திரிகைக் குழு கூறுகிறது.

“இந்த பொது சுகாதார பேரழிவைச் சுற்றியுள்ள கூற்றை மாற்றி சீனாவின் பெயரைக் காப்பாற்ற சீனாவின் பிரச்சார இயந்திரம் முயற்சிக்கிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, தொற்றுநோய் பற்றிய அறிக்கைகளையும் ஊடக செய்தி அறிக்கைகளையும் உருவாக்க முயற்சிக்கும் வெளிநாட்டு பத்திரிகைகள் தொடர்ந்து அவர்களது முயற்சிகளிலிருந்து தடுக்கப்படுகின்றன” என்று ஊடகக் குழு தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதற்கும் ஊடகங்களுக்கான அணுகலைத் தடுப்பதற்கும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை ஒரு வழியாக சீனா தவறாமல் பயன்படுத்துகிறது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பல முறை நிருபர்கள் “ஒன்று வெளியேறுங்கள் அல்லது தனிமைப்படுத்தப்படுவீர்கள்” என அச்சுறுத்தப்படுவதால், அவர்கள் தங்கள் ஊடக ஆய்வுப் பணிகளை கைவிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட 42 பத்திரிக்கை பணியாளர்கள், சுகாதார பாதுகாப்பு கட்டுப்பாடுகளைக் காரணம் காட்டி சில இடங்களிலிருந்து வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாகவோ, அல்லது, அனுமதி மறுக்கப்பட்டதாகவோ கூறியுள்ளனர். எனினும், அப்படி எந்தவித ஆபத்துகளும் அந்த இடங்களில் இருந்ததாக பத்திரிக்கை நிருபர்களுக்கு தோன்றியதில்லை.

பெய்ஜிங் அதிகாரிகள் கொரோனா வைரஸ் சோதனைச் சாவடிகள் மற்றும் தொடர்பு தடமறிதல் செயலிகளை உருவாக்கியுள்ளதாகவும், அவை “சீன அதிகாரிகளுக்கு தரவுகளை சேகரிக்கவும் வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களையும் அவர்களின் ஆதாரங்களையும் கண்காணிக்கவும் கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன” என்றும் FCCC மேலும் கூறியுள்ளது.

வேறு யாருக்கும் பொருந்தாத கொரோனா வைரஸ் நடவடிக்கைகளுக்கு இணங்குமாறு பெய்ஜிங் அதிகாரிகள் பத்திரிகையாளர்களைக் கேட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சீனாவின் வெளிநாட்டு உறவுகள் பெரும்பான்மையான நாடுகளுடன், குறிப்பாக அமெரிக்காவுடன்  மோசமடைந்துள்ள நிலையில், மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் தியனன்மென் சதுக்க படுகொலைக்குப் பின்னர் வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களை மிகப் பெரிய அளவில் சீனா வெளியேற்றியது 2020 ஆம் ஆண்டில்தான் என்று FCCC கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here