அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தைவானுக்கு ஆதரவாக இருந்து வந்தது.
இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தைவானுக்கு ஆதரவாக இருந்து வந்தது. சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தைவானுக்கு அமெரிக்கா ராணுவ ஆயுதங்களை விற்பனை செய்து வந்தது.
இந்த நிலையில் அமெரிக்காவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்றுள்ளார். அவர் தைவான் விவகாரத்தில் முந்தைய நிர்வாகத்தின் அதே கொள்கையை கடைபிடித்து வருகிறார்.
இதனை கண்டித்துள்ள சீனா, தைவானுக்கு ஆதரவு காட்டும் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆபத்தான கொள்கையை மாற்றியமைக்க வேண்டுமென தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவு மந்திரி வாங் யி கூறுகையில், “தைவான் பிரச்சினையில் சீன அரசு சமரசம் அல்லது சலுகைகளுக்கு இடமளிக்காது.