சிலியாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வரைப்பட்டகை

-முன்னாள் மாணவர் சங்கம் வழங்கியது

சிலியாவ்-

சிலியாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வழி ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தலை மேற்கொள்வதற்கு வசதியாக வரைப்பட்டகை (டெப்லட்) வழங்கப்பட்டது.

நேற்று முன் தினம் இரவு இங்கு சிலியாவ் ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தில் அப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம், அப்பள்ளியைச் ஙே்ர்ந்த வசதி குறைந்த குடும்பங்களைச்  சேர்ந்த 10 மாணவர்களுக்கு அதனை வழங்கினார்கள்.

முன்னதாக பேசிய சங்கத் தலைவர் தனபாலன் மாரியப்பன், இப்பள்ளியின் கல்வி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்களான எங்களின் பங்களிப்பாக, இயன்ற உதவிகளை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி பள்ளி தலைமையாசிரியரின் வேண்டுகோளுக்கு இணங்கி, இப்பள்ளி மாணவர்களில் சிலர் ஆன்லைன் வழி ஆசிரியர்கள் வழங்கும் பள்ளி பாடங்களை மேற்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்குகிறார்கள்.

அம்மாணவர்களுக்கு வரைப்பட்டகை தேவைப்படுவதாகவும் அவற்றை அவர்களுக்கு பெற்று தந்தால் பெரும் உதவியாக இருக்கும் என குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து நாங்கள் முன்னாள் மாணவர்கள் சிலர் ஒன்றிணைந்து, அவற்றை மொத்தமாக வாங்கி, மாணவர்களுக்கு இன்று அன்பளிப்பாக வழங்கினோம் என குறிப்பிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அப்பள்ளி தலைமையாசிரியர் சிவகுமார் வெள்ளைசாமி, கடந்தாண்டு தொடங்கிய கோவிட்-19 தொற்றின் காலகட்டத்தில், பள்ளிகள் மூடப்பட்ட வேளையில், ஆன்லைன் கற்றல் கற்பித்தல் மூலமாக மாணவர்களிடையே கல்வியை கொண்டு சேர்ப்பதில் ஆசிரியர்கள் பெரும் சவாலை எதிர்நோக்கினார்கள் என குறிப்பிட்டார்.

பெரும்பாலான இப்பள்ளி மாணவர்களின் பெற்றோர் கைப்பேசி வசதியை கொண்டிருக்கத்தால், ஆன்லைன் பாடங்களை மேற்கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

இன்றைய சூழ்நிலையில் அம்மாணவர்களுக்கு வரைப்பட்டகை வசதியை இலவசமாக ஏற்பாடு செய்துத் தர முன் வந்திருக்கும் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்களுக்கு பள்ளி சார்பாக தாம் நன்றி தெரிவித்துக்கொள்வதாக சிவகுமார் தெரிவித்தார்.

  • நாகேந்திரன் வேலாயுதம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here