திருவனந்தபுரம்-காசர்கோடு சில்வர் லைன் ரயில் திட்டம்

தனியார் பங்களிப்பை நாடும் கேரள அரசு

திருவனந்தபுரம்:

திருவனந்தபுரம், காசர்கோடு இடையிலான 532 கிமீ தொலைவு கொண்ட சில்வர் லைன் ரயில் திட்டத்துக்கான நிதியுதவியை தனியாரிடம் இருந்து பெற கேரள அரசு முடிவு செய்துள்ளது.

கேரளாவில் திருவனந்தபுரம், காசர்கோடு இடையிலான 532 கிமீ தொலைவை ரயிலில் கடக்க 12 மணி நேரம் ஆகிறது. 532 கிமீ தொலைவிலான இந்த ரயில் பாதையில் ரயில்களை 200 கிமீ இயக்கினால் பயண நேரம் 4 மணி நேரமாக குறையும். 64000 கோடி மதிப்புள்ள இந்த திட்டம் வரும் 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில்வர்லைன் புராஜெக்ட் என்ற இந்த திட்டத்தில் தனியாரிடம் இருந்து நிதி உதவியை பெற கேரள அரசு முடிவு செய்துள்ளது. திட்டத்துக்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திடம் இருந்து 2.5 பில்லியன் டாலர் ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது.

கேரளா ரயில் மேம்பாட்டு கழகமான K-Rail மத்திய ரயில்வேத்துறை அமைச்சகம் மற்றும் கேரள அரசு இணைந்து நிதி பங்கீடு செய்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது. நிதியுதவியை, தனியாரிடமிருந்தும் பெற அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து கேரளா ரயில் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநர் அஜித் குமார் கூறியிருப்பதாவது:

இந்த திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை மத்திய ரயில்வே அமைச்சகத்தால் ஒப்புதல் பெறப்படும். இந்த திட்டம் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

திட்டத்தில் மாநில அரசு 51 சதவீத பங்குகளை வைத்திருக்கும், மீதமுள்ள 49 சதவீதம் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் வரும். கொச்சின் சர்வதேச விமான நிலையம் மற்றும் கண்ணூர் சர்வதேச விமான நிலையம் போன்ற திட்டங்களை போலவே, 40 சதவிகிதம் பங்குகளுக்கு அனுமதிக்கலாம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here