உலகின் தலைசிறந்த பெண்களில் தமிழிசை!

  -குவியும் பாராட்டுகள்!

உலகம் முழுவதும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு இன நடவடிக்கைக் குழு என்ற அமைப்பு, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறப்பான சாதனை படைத்தவர்களையும், மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த வித்திட்டவர்களையும் இனம் கண்டு அதில் 20 பெண்களுக்கு விருதுகளை அறிவித்திருந்தது.

இந்த இருபது பெண்களின் பட்டியலில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இடம்பெற்றிருந்தார். பெண்கள் உரிமை, பாலின சமத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் ஆற்றிய சிறப்பான சேவைக்காக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு இவ்விருது வழங்கப்பட்டதாக இந்நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.

 

இந்த விழாவில் புதுவையில் இருந்தபடியே காணொளி மூலம் கலந்து கொண்ட தமிழிசை பெண்கள் முன்னேற்றத்திற்கான தனது பொறுப்பை இரட்டிப்பாக்கி உள்ளதாகவும், குடும்பத்திற்காகவும், சமூகத்திற்காகவும், நாட்டிற்காகவும் உழைக்கும் கோடிக்கணக்கான பெண்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன் எனவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here