பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்

-கசியவிட்ட ஜவான் கைது

ஜெய்ப்பூர்:

பாகிஸ்தானுக்கு ரகசிய தகவலை கசியவிட்டது தொடர்பாக ராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் Honey-Trap எனப்படும் சமூக ஊடகம் மூலமாக உளவு பார்க்கும் பெண்ணின் வலையில் சிக்கியிருந்தார்.

சமூக ஊடகங்கள் மூலம் பாகிஸ்தான் இந்திய ராணுவத்தில் பணிபுரிபவர்களிடம் இருந்து தகவல்களை திரட்ட முயற்சிக்கிறது. பெண்களின் பெயரில் சமூக ஊடக கணக்கு இருக்கும். அந்த கணக்கை இயக்குபவரின் வலையில் ராணுவத்தில் பணியாற்றும் யாராவது சிக்கிக் கொண்டால், அவர்களிடம் இருந்து சாதுரியமாக தகவல்களைக் கறந்துவிடுவார்கள். தாங்கள் இந்த வலையில் சிக்கி தங்களுக்குத் தெரியாமலேயே தகவல்களை கசியவிடுகிறோம் என்பதும் பலருக்கு தெரிவதில்லை.

ராணுவத்தைச் சேர்ந்த ஜவான் ஒருவர் பாகிஸ்தான் முகவரிடம் ரகசியத் தகவல்களைக் கசிய விட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

22 வயதான ஆகாஷ் மஹாரியா, ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் வசிப்பவர், சிக்கிமில் பணிபுரியும் அவர் ரகசியத் தகவல்களை கசிய விட்டதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அவர் ஒரு பாகிஸ்தான் உளவுத்துறை முகவருடன் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்டு ரகசிய தகவல்களை பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது. பேஸ்புக்கில் பெண் பாகிஸ்தான் முகவர்களுக்கு தகவல்களை அவர் வழங்கியதாக கூறப்படுகிறது. மஹாரியாவை கைது செய்த ராஜஸ்தான் பிரிவின் உளவுத்துறையின் கூற்றுப்படி, பாகிஸ்தான் முகவர்கள் பேஸ்புக்கில் போலி அடையாளங்கள் மூலம் அவருடன் தொடர்பு கொண்டனர்.

மஹாரியா தனது மொபைல் மூலம் இந்திய ராணுவம் குறித்த மூலோபாய தகவல்களை வழங்குவதில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவர் பாகிஸ்தான் பெண் முகவர்களுடன் வெளிப்படையான உரையாடல்களை இயல்பான மேற்கொண்டிருந்தார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

புலனாய்வு அமைப்புகளின் விசாரணையைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார் என்று தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here