மிந்தடைக்கு காரணம் என்னவாக இருக்கும்!

 

சீனாவின்  சைபர் தாக்குதலா?

கடந்த ஆண்டு அக்டோபர் 12 அன்று மும்பை (Mumbai) மாநகரம் முழுவதும் திடீர் மின்தடை ஏற்பட்டது. பல மணி நேரங்களுக்கு நீடித்த மின்தடையால் மும்பை முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டனர்,

மின்சார ரயில் சேவை தடைப்பட்டது, தண்ணீர் விநியோகம் சில இடங்களில் பாதிக்கப்பட்டது, நகரமே மின்சாரம் இன்றி ஸ்தம்பித்து நின்றது.

அந்த நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்விநியோகாம் பாதிக்கப்பட்டதாக மும்பை மாநகராட்சி தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது அது தொழில்நுட்பக் கோளாறு இல்லை, சைபர் தாக்குதலாக இருக்கலாம் என மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனமான ‘Recorded future’ நிறுவனம் மும்பையில் ஏற்பட்ட மின்தடைக்குச் சீனாவைச் சேர்ந்த ‘Red Echo’ என்ற அமைப்பின் சைபர் தாக்குதல் காரணமாகயிருக்கலாம் என அறிக்கை வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்தில் சைபர் பாதுகாப்புப் பிரிவும் இதே விவகாரம் தொடர்பாக முதற்கட்ட அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையின் படி மாநிலத்தின் மின்வாரிய சர்வர்களில் சைபர் தாக்குதல்கள் நிகழ்ந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here