சிரம்பான்-
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் 15.3.2021 திங்கள்கிழமை தொடங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான மக்கள் ஓசை நாளிதழை இலவசமாக வழங்கும் திட்டத்தில், 9 பள்ளிகளுக்கு முதல் கட்டமாக விநியோகம் செய்யப்பட்டது.
சில நல்லுள்ளங்களின் ஆதரவோடு தமிழ் வாசிப்புத் திட்டத்தை மக்கள்ஓசை வழியாக மேற்கொள்ளும் முழு முயற்சியாக இல்லந்தோறும் மக்கள் ஓசை, பள்ளிதோறும் இன்பத்தமிழ் திட்டம் வெற்றிகரமாக தொடங்கப்பட்டது.
அத்திட்டத்தின் வழி இங்கு லோபாக் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கரங்களில் மக்கள் ஓசை தவழும் காட்சிகள் மனத்தை நெகிழவைத்ததாகக் கூறுகிறார் அப்பள்ளியின் பெற்றோர் – ஆசிரியர் சங்கத் தலைவர் வி.எஸ்.குணசேகரன்.
அதேவேளை மக்கள் ஓசை நாளிதழை பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகக் கிடைக்க அன்பளிப்புச் செய்த லோபாக் சட்டமன்ற உறுப்பினர் சீவ் சே யோங்கிற்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இதனிடையே பள்ளிப் பாடங்கள் மீதான ஆர்வத்திற்கு பத்திரிகைகளின் வாசிப்பு ஒரு தூண்டுகோலாக அமையும் என பள்ளி தலைமையாசிரியர் திருமதி மேனகை கருப்பையா நம்பிக்கை தெரிவித்தார்.
- நாகேந்திரன் வேலாயுதம்