இந்திய விமானப்படை போர் விமானம் விழுந்து நொறுங்கியது

 -கேப்டன் மரணம்

டில்லி

இந்திய விமானப்படையின் மிக் 21 பைசன் விமானம் பயிற்சியின் போது விழுந்து நொறுங்கியதில் கேப்டன் உயிர் இழந்தார்.

இந்திய விமானப்படை வீரர்கள் மிக் 21 விமானம் மூலம் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் பகுதியில் ஒரு விமானம் இவ்வாறு பயிற்சியில் ஈடுபட்டு வந்தது.

அப்போது தொழில்நுட்பக் கோளாறால் விமானம் விபத்துக்குள்ளாகியது. விமானி பாராசூட் விமானம் மூலம் வெளியேறி உயிர் பிழைத்தார்

நேற்று இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக் 21 பைசன் விமானத்தில் கேப்டன் குப்தா என்பவர் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த விமானம் மத்திய விமான நிலையம் ஒன்றில் இருந்து நேற்று காலை போர்ப் பயிற்சிக்குக் கிளம்பி உள்ளது.

அந்த விமானம் பயங்கர விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கி உள்ளது. கேப்டன் குப்தா இந்த விபத்தில் உயிர் இழந்துள்ளார்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. உயிர் இழந்த விமானி குப்தாவின் குடும்பத்துக்கு விமானப்படை இரங்கல்களைத் தெரிவித்துள்ளது. கடந்த 2016 முதல் 2019 வரை இந்திய விமானப்படை 27 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை விபத்தில் இழந்துள்ளது. இதில் விமானங்கள் 15 ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here