-கெட்டிக்காரன் புளுகு எட்டும் நாள் வரை!
பத்தே நாட்கள் போதும், பகல் வேடம் வெளிச்சமாகிவிடும் என்று கூறியிருக்கிறார் விவசாயம் , உணவு, துறை சார்ந்த துணை அமைச்சர் டத்தோசெரி அஹ்மட் ஹம்சா .
கெட்டிக்காரன் புளுகு எட்டே நாள் என்பது சாதாரணமாக பொய் சொல்லுகின்றவர்களுக்காகச் சொல்லப்படுகின்ற ஒரு வார்த்தை . உண்மை எட்டும் நாளில், குட்டு உடைந்துவிடும் என்பதுதான் அந்த வார்த்தையின் பொருள். ஆனால் பத்து நாள் என்பது எதற்காக என்று மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டியதில்லை.
விஷயம் ஒன்றும் பெரிதில்லை . வெறும் கோழி முட்டை சமாச்சாரம்தான்.பள்ளிகளில் பிள்ளைகள் வாங்கினால் திட்டுகின்ற மனிதர்களுக்கு நேற்று தொடங்கி பத்து நாட்கள் காத்திருந்தால் பயன்பாட்டுக்குத்தடை செய்யப்பட்ட முட்டைகளின் தரம் என்னவென்று தெரிந்துவிடும் என்பதுதான் செய்தி.
அண்மையில் சிங்கப்பூர் இறக்குதி செய்த முட்டை பயன்பாட்டுக்குத்தடை விதித்ததிருந்தது, மலேசியாவின் ஜெரம் பகுதியிலுள்ள பண்ணைகள் சிலவற்றிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட முட்டைகளில் SE (Salmonella Enteritidis) வகைக்கிருமிகள் இருப்பதை சிங்கப்பூர் அரசாங்கம் கண்டுபிடித்து தடை செய்தது குறிபிடத்தக்கது.
சிங்கப்பூரின் தடைக்கிணங்க மலேசிய பயனீட்டுத்துறை விரைந்து நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதேவேளை சிலாங்கூர் ஜெரம் வட்டாரத்திலுள்ள 8 பண்ணைகளின் முட்டைகள் விறபனைக்குத்தடை செய்யப்பட்டிருக்கிறது. இம்முட்டைகளின் பதனிடு முறையில் தவறு நேர்ந்திருக்கும் சாத்தியம் இருப்பதாக நம்பப்படுகிறது.
இது ஒரு புறமிருக்க , எதை அனுப்பினாலும், அல்லது எதை ஏற்றுமதி செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு கொள்முதல் செய்துகொள்வார்கள் என்பதில் இன்னும் அலட்சியமாக செயல்படும் உற்பத்தியாளர்களுக்கு இது பாடமாகவும் அமைய வேண்டும்.
பொருட்களின் தரம் மட்டுமல்ல, மலேசியத் தயாரிப்புகள் மீதே சந்தேகப் பார்வை விழும்படியாக்கிவிடக்கூடாது என்பதில் மலேசிய உற்பத்தியாளர்கள் போதிய கவனமாக இல்லை என்றே தோன்றுகிறது.
இதற்கு முன்னும் கேமரன் மலை விளைச்சல்களில் பூச்சுக்கொல்லி மருந்தில் அளவு அதிகமாக இருந்ததால் சிங்கப்பூரில் அனுமதிக்கப்படவில்லை என்பதையும் மறந்துவிடக்கூடாது.
நம் உற்பத்திகள்தாம் நம் பெயரை உலக அளவில் உயர்த்திக்காட்டும் இதுதான் மூலதனம். இதில் மூளைத்தனமும் முக்கியமானது. ஆதலால் ஏற்றுமதிப் பொருட்கள் எதுவானாலும் தரம் முக்கியம், அதை தரமிக்க பொருளாகத் தயாரிப்பதில் அவசரம் காட்டுவதில் அர்த்தமில்லை.
ஏற்றுமதுஇப்பொருட்கள் தரமாக இருப்பதை உறுதி செய்ய நம் கடப்பாட்ட்டில் பலவீனம் இருந்தால் அதைக்களைவதற்கான வழிகளைத்தான் ஆராயவேண்டும்!
அப்படிச் செய்தால் ஏற்றுமதியில் நிறைவும் நம்பிக்கையும் ஏற்படும்!
—-கா.இளமணி