விஜே சித்ராவுக்கு வித்தியாசமாக அஞ்சலி செலுத்திய உறவினர்கள்

 – கண் கலங்க வைக்கும் புகைப்படம்.!!

விஜே சித்ராவுக்கு அவரது உறவினர்கள் வித்தியாசமாக அஞ்சலி செலுத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

VJ Chithra Family Respect to Chithu : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் சித்ரா. இவர் சின்ன பாப்பா பெரிய பாப்பா போன்ற சில சீரியல்களில் நடித்திருந்தார்.

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார்.

இப்படியான நிலையில் தான் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் ஸ்டார் ஓட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவு இன்னும் ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் முல்லையின் உறவினர்கள் அவருடைய முகம் பதித்த மாஸ்க் அணிந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் கண்ணீருடன் முல்லையை மிஸ் செய்வதாக கமெண்ட்டுகளில் கூறி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here