மும்பை, மின்சார விபத்தில் கையை இழந்த மும்பைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு, மூளைச்சாவு அடைந்த 9 வயது சிறுமியின் கை வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டு புதிய மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிக இளம் வயதில் தோள்பட்டை அளவிலான கை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெருமையை இச்சிகிச்சை பெற்றுள்ளது.
விபத்தும் துயரமும்
மும்பை குர்லா பகுதியைச் சேர்ந்த அனம்தா அகமது என்ற சிறுமி. அவர் கடந்த 2022-ஆம் ஆண்டு தனது 13-வது வயதில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டு மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு சென்ற 11,000 (கேவி) உயர் அழுத்த மின்சாரக் கம்பியைத் தொட்டதில், அவரது வலது கை முற்றிலும் கருகி, அழுகிய நிலைக்குச் சென்றது. இதனால் மருத்துவர்கள் அவரது வலது கையைத் தோள்பட்டை வரை துண்டித்து அகற்றினர்.









