சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ!

 

கட்சிதாவல் கடுப்பானதா? களிப்பானதா!

கட்சித்தாவல் என்பது ஒரு கிளையில் இருந்து மற்றொரு கிளைக்குத் தாவுதல் போன்றது. இது ஒரு மந்தியின் செயல் என்று எல்லாராலும் கூறப்படுகிறது. இந்த மந்திகளின் வேலையை சில மந்திரிகளும் , நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் செய்கிறார்கள் என்றால் என்ன காரணமாக இருக்கும்?

அடேங்கப்பா  அரசியலில் இப்படியும் வணிகம் நடக்கிறதா என்று மூக்கின்மேல் விரல் வைத்து சிந்திக்க வேண்டியிருக்கிறது அல்லவா? 

அரசியல் வியாபாரத்தில் நல்ல லாபம் என்று துன் மகாதீர் சொல்கிறார். இது உண்மையென்றால இதற்கு நல்ல என்ற வார்த்தை சரியானதாக இருக்காது. கொள்ளை லாபம் என்று சொன்னால் பொருந்தலாம் என்பதே சரியாக இருக்கும் அல்லவா?

அரசியல் என்பது ஆட்சிக்கான கருவிகள் மட்டுமல்ல. முதலீடு இல்லாத வியாபாரம். பெருந்தொகைக்கான் பேரம் பேசப்படும் சந்தை.  நல்லாட்சி காலம் என்பதெல்லாம் இப்போது இல்லை. எதிர்பார்ர்கவும் கூடாது. இடத்தைச் சரியாக தக்க வைத்துக்கொள்ளும் தந்திரச்சாலை அரசியல்.

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்ற மந்திரச்சொல் இன்றைய மந்திரிகளுக்கும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மிகவும் பயன்படுவதாகவே இருக்கிறது. 

இதைத்தான் துன் சுட்டியிருக்கிறார். அரசியலில் இன்றைய எதிரி நாளைய நண்பன். இறைய எதிரி நாளைய எதிரி.  இது சகடச்சக்கரம் என்பதால் கட்சித்தாவுதல் என்பது புதுமையானதல்ல.

அடுத்து வரும் தேர்தல்களில் பெரும் அளவு செலவு செய்தாக வேண்டும, இதில் கட்சிப்பணமும் கட்சிக்கப்பாற்பட்ட பணமும் தேவைப்படும். இதற்கெல்லாம் இருப்பைக்குறைத்துக்கொள்ள முடியாது.

வழிப்பிள்ளையார் தேங்காயை நிராகரிப்பது சிறந்ததது அல்ல. வலிக்காமல் அந்தப்பணத்தை சம்பாதிக்க கட்சித்தாவல் ஒன்றுதான் சளிக்கதாத வணிகம். 

சரியான காலத்தில் பேரம் நடக்கும்போது அதை புத்திசாலிதனமாக பயன்படுதிக்கொள்வதே சாணக்கியம்.

தங்கள் வணக்கிக் கணக்குககளில்  முடங்கிக்கிடக்கும் பெருந்தொகைக்கு முறையான கணக்கு இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் என்ன ஆகும். இவற்றையெல்லாம் துருவிக்கண்டுபிடிக்கும் குருவிக்கூட்டம் எப்போதுமே கழுகாக வலம் வரும்போது அதன் கழுகுப்பார்வையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. இதையும் காரணமாக முன் வைத்து ஆளை அமுக்கும்  வித்திகளைக்காட்டி பேரம் பேசப்படுவதாக  தகவலும்  இருக்கிறது.

இதையே காரணமாக வைத்துக்கொண்டு தூண்டில் போடும்போது தப்பிக்க வேறு வழி இருக்காது. இருப்புகளையும் காப்பாற்ற வேண்டும், இருக்கையும் நிலைக்க வேண்டுமென்றால் கட்சித்தாவல் ஒன்றும் கஷ்டமானதால். வந்தால் மலை என்பதாக்தான் இருக்கும்.

கட்சித்தாவல் என்பது அந்த நேரத்துக்கான அசகாய தந்திரம் மட்டுமே. அது நிரந்தரம் என்பதல்ல. அந்தத் தாவல் சில வேலைகளில் காலை வாரிவிட்டாலும் . கைக்கு வந்தது பெரிதான கைமாறுதானே! நட்டக்கணக்கு நிச்சயம் இருக்காது.

என்ன! நாலுபேர் நாலு விதமாகப் பேசுவார்கள் . அவ்வளவுதானே? எத்தனை நாளைக்குப் பேசப்போகிறார்கள்?

மிரட்டப்படுப்படுவதும் உண்டாமே. அதனாலென்ன ? பனங்காட்டு நரிகள் ஆனபின் மிரட்டலால் என்ன வந்துவிடப்போகிறது? 

கட்சித்தாவல் சட்டதிற்குப் புறம்பானது என்று ஒத்துக்கொள்ளாதவரை, சட்டம் பாயாதவரை சட்டையை மாற்றும் கட்சித்தாவல் என்பது சுகமான வணிகமாகத்தான் இருக்கும்.

கட்சிதாவலுக்கான காரணங்கள் எதுவாகவும் இருக்கலாம்.  தாவல் என்று முடுவு செய்துவிட்டால் நம்பிக்கை துரோகமும் கொள்ளை லாபத்தில் முடங்கிப்போய்விடும்.

ச்சீச்சீ இந்தப்பழம் ரொம்ப புளிக்குதே!

-அலசுகிறார் பெஞ்ச் பெரியசாமி  அல்லது பெஞ்சமின் பெரியசமி

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here