பெஞ்ச் பெரியசாமியின் அலசல்
– தம்பி என்ற சொல்லுக்குத் தர்க்கம் எதற்கு?
பொறுப்பற்ற தன்மையில் மலேசியர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையான வார்த்தையாக இருக்கும் . ஆனாலும் அப்படிச் சொல்வதில் உள் அர்த்தம் இருக்கிறது.
மனித உயிர்களுக்கு மட்டும் அல்ல. அனைத்து உயிரினங்களுகும் தேவைப்படுவது நீராகத்தான் இருக்க முடியும் . நீரில்லாமல் உலகம் செழிக்காது. உயிர்களும் நிலைக்காது. இயற்கையும் அஸ்தமனமாகிவிடும் என்பது கற்பனையல்ல. வலுவான சத்தியம்.
அப்பட்டிப்பட்ட நீரின் தேவையைப்புரிந்து வைத்திருக்கிறோமா? நிச்சயமாக இல்லை என்றுதான் கூறவேண்டியிருக்கிறது.
எதிர்காலத்தில் உலக நீரின் தேவை பல மடங்கு அதிகரிக்கும். அப்போது போதிய நீர்வளம் இல்லாமல் போகும் அவலம் உருவாகிவிடும் என்று இப்போதே உலகலாவிய குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. தாகத்தல் தன்மை இப்போதே உணரப்படுகிறது என்பதன் குரல்கள் தாம் அவை.
உலக நீர்வளம் முற்றாக வற்றிப்போய்விடும் என ஆய்வுகள் காட்டுகின்றன. அதுபற்றியெல்லாம் எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறோம் என்று சொன்னால் கோபம் வரலாம். ஆனால் கோபப்படுவதில் அர்த்தம் இருக்கிறதா என்று சற்று அலசுகிறார் பெஞ்ச் பெரியாசாமி
மலேசியர்களில் ஒருவர் 219 லிட்டர் நீரைப்பயன் படுத்துவதாக ஓர் ஆய்வு கூறுகிறது. மலேசியரை ஒப்பிடும்போது சிங்கப்பூரியர் 141 லிட்டர் நீரைப்பயன்படுத்துக்கிறார் என்பதன் வேறுபாடு புரியும். இதில் இந்தோனேசியர் 144 லிட்டரைப் பயன் படுத்துகிறாராம்.
மலேசியாவைப் பொறுத்தவரை இப்போதைய தேவை மிக அதிகமாக இருக்கிறது. அத்ற்காக நீரின் வளத்தை அதிகரிக்கும் நிலைமை உருவாகியிருக்கிறது. நீரின் இருப்பைவிட பயன்பாடி கூஉடிக்கொண்டே இருந்தால் நிலைமை என்னவாக மாறும்?
ஒரு ஒப்பீட்டில் 1981 இல் ஒரு நாளைக்கான நீரின் உற்பத்தி 2,126 (எம் எல் டி) மில்லியன் லிட்டராக இருந்தது. இதே உற்பத்தி 2017 இல் 8 மடங்கு அதுஇகரித்திருக்கிறது. அதாவது 16884 எம் எல் டி ஆக அதிகரித்திருக்கிறதாம். அத்ற்கு மக்கள் தொகை அதிகரிப்பே காரணம்.
மக்கள் தொகை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த நிச்சயம் இயலாது. அதற்கான திட்டங்களும் நம்மிடம் இல்லை. அதனால் மக்கல் தொகை வீக்கத்தைக் குறைத்துக்கொள்ள முடியாமல் போகலாம். அதனால் நீரின் தேவைகளும் அதிகரித்துக்கொண்டேதான் போகும்.
நீரின் அன்றாட சுத்திகரிப்பில் 60 விழுக்காட்டு பயன்படுத்தப்படுகின்றனவாம் . இது கூடிக்கொண்டே இருக்கும். அதனால் நீரின் அளவைக் கூட்டிக்கொண்டே போக வேண்டும். இதுதான் இன்றைய சவாலாக முளைத்திருக்கிறது.
உலகம் நமக்காக வழங்கியிருக்கும் அரிய பொக்கிஷம் நீர். இதிலும் அரசியல் ஆர்ப்பாட்டம் செய்கிறது, ஆற்று நீருக்கும் அறிவின்றி தடை போடும் ஜன்மங்கள் சொந்த நாட்டிலும் இருக்கிறார்கள்.
உள்ளபடியே அறிவை முட்டியில் வைத்திருப்பவர்கள் இப்படித்தான் செய்வார்கள். இதன் பேர் அறிவீனம்.
உலக நாடுகளில் நீர் வளங்களைப் பராமரிக்கும் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும் என்று இப்போதே வலியுறுத்தபட்டுவருவதை பொது மக்களும் நன்கு புரிந்துகொள்ள வேண்டிய கால கட்டத்தில், அதிக நீர் விரயத்தைச் செய்கின்றவர்களாக மலேசியர்கள் இருக்கின்றார்கள் என்பதுதான் இன்றைய கவலை.
நீர் சேமிப்புக்கு நாம் தயாராக இல்லாவிட்டல். நம்மைக் காப்பாற்ற இறைவனால் கூட முடியாது. நீர் செயற்பாட்டில் சுய கட்டுப்பாடு மிக முக்கியமானது. இதை ஒரு பழக்கமாக மாற்றிக்கொள்ள மலேசியர்கள் தயாராக வேண்டும்.
இயற்கையின் உன்னத வழங்கலாக இருக்கும் நீரை மனிதன் உணர்வின்றி செலவு செய்கிறான். அதனால் உணவின் விளைச்சல்கள் கூட பாதிக்கப்படுகின்றன.
நீர் இல்லாமல் வாழ்வது என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டதாகும். அப்படிப்பட்ட துர்ப்பாகிய நிலைமைக்கு நாமே உதாரணமாகிவிடக்கூடாது. ஆதலால், நீர் சேமித்திட்டத்தை ஓர் பண்பான பழக்கமாக ஆக்கிக்கொள்வோம் .
இல்லங்கள் தோறும் மழைநீர் சேமிப்புத்திட்டத்தை இப்போதே வலியுறுத்தலாம். சில்லைறை பயன்பாட்டுக்கு அது உதவும். தனி மனித உபயோகத்தை வெகுவாகக் குறைக்கும் பாடம் பள்ளிப்பிள்ளைகளுக்குப் போதிக்கப்பட பள்ளியிலும் பாடமாக்கலாம்.
தம்பி என்ற சொல்லுக்கு தர்க்கம் செய்யும் டேவான் பகாசா தண்ணீர் வளத்துக்கு நல்ல ஆலோசனை தரலாம். புண்ணியமாக இருக்கும் .